அன்புள்ள எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களுக்கு, சேலத்தில் இருந்து இளங்கோவன் எழுதும் கடிதம். வணக்கம்.


உங்களின் 'கருந்துளை' நாவலைப் படித்தேன். நீங்கள் எழுதிய நூல்களில் இதுதான் நான் முதன் முதலாகப் படித்தது. வடசென்னை மக்களின் (குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள்) வாழ்க்கையை மையப்படுத்தி மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சமரன், சுகு, வெண்பா பாத்திரங்கள் சிறந்த முறையில் படைக்கப்பட்டிருக்கின்றன. நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் போதே, சுகுவின் உரையாடல்கள், சுகுவின் முடிவு நெருங்கப் போவதைக் கட்டியம் கூறுகின்றன. நான், சுகு தனது மன உளைச்சலால், அதிவேகமாக வாகனம் ஓட்டும் போது விபத்தில் மரணமடையலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதை ஒரு தற்கொலையாகக் காட்டியதே சிறந்த முடிவு. 


சமரன், விபத்துக்காளாகி, சுயநினைவு தப்பிச் சிகிச்சையில் உள்ள போது, அவனது நினைவுகளில் பதிவாகும் காட்சிகளில் …


அன்புள்ள எழுத்தாளர் கரன் கார்க்கி அவர்களுக்கு, சேலத்தில் இருந்து இளங்கோவன் எழுதும் கடிதம். வணக்கம்.


உங்களின் 'கருந்துளை' நாவலைப் படித்தேன். நீங்கள் எழுதிய நூல்களில் இதுதான் நான் முதன் முதலாகப் படித்தது. வடசென்னை மக்களின் (குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள்) வாழ்க்கையை மையப்படுத்தி மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சமரன், சுகு, வெண்பா பாத்திரங்கள் சிறந்த முறையில் படைக்கப்பட்டிருக்கின்றன. நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் போதே, சுகுவின் உரையாடல்கள், சுகுவின் முடிவு நெருங்கப் போவதைக் கட்டியம் கூறுகின்றன. நான், சுகு தனது மன உளைச்சலால், அதிவேகமாக வாகனம் ஓட்டும் போது விபத்தில் மரணமடையலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதை ஒரு தற்கொலையாகக் காட்டியதே சிறந்த முடிவு. 


சமரன், விபத்துக்காளாகி, சுயநினைவு தப்பிச் சிகிச்சையில் உள்ள போது, அவனது நினைவுகளில் பதிவாகும் காட்சிகளில் பனி முக்கிய பங்கு வகிக்கிறது. பனி பற்றிய வர்ணனை நன்கு அமைந்துள்ளது. இருப்பினும், எனது வாசிப்புத் திறனுக்கு, வர்ணனை அதிகமாக உள்ளதாகப் படுகிறது. 


காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் நூலில் இடம் பெற்றுள்ளது. பக்கம் 364இல், இரட்டை வாக்குரிமை விவகாரத்தில் பிரிட்டிஷ் பிரதமரிடம் ஒப்புக் கொண்ட காந்தி, பின்னர் மாறிவிட்டதாக அம்பேத்கர் காந்தி மீது குற்றம் சாட்டியதாகப் பதிவு செய்துள்ளீர்கள். 


இது முழுக்க முழுக்கத் தவறான தகவல் ஆகும். பூனா ஒப்பந்தம் ஏற்பட காந்தி - அம்பேத்கர் இடையே நடந்த உரையாடலில் இப்படி ஒரு கேள்வியை அம்பேத்கர் எழுப்பவில்லை. ஏனென்றால், காந்தி வட்டமேசை மாநாட்டில் ஒப்புதல் எதையும் பிரிட்டிஷ் பிரதமருக்குத் தரவில்லை என்பதை அம்பேத்கர் அறிவார். மாறாக, மாநாட்டில், தாழ்த்தப்பட்டோருக்கு இரட்டை வாக்குரிமை வழங்கப்படுவதைத் தான் எதிர்ப்பதாகக் கூறிய காந்தி, அவ்வாறு வழங்கினால், அதைத் தன் உயிரைக் கொடுத்தும் தடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.


எரவாடா சிறையில் இருந்த காந்தி, மார்ச் 11, 1932 அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா மந்திரியாக இருந்த ஸர் சாமுவேல் ஹோருக்கு எழுதிய கடிதத்திலும், ஆகஸ்ட் 18, 1932 அன்று பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மக்னால்டுக்கு எழுதிய கடிதத்திலும், தான் வட்டமேசை மாநாட்டில் எழுப்பிய எதிர்ப்பைக் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் வைத்துப் பார்க்கும்போது, இது ஆதாரமற்ற தகவல் என்பது உறுதியாகிறது. 

(ஆதாரம்: மகாத்மா காந்தியின் படைப்புகள்: தேர்ந்தெடுத்த கடிதங்கள் புத்தகம். பக்கங்கள் 182-189)


காந்தி உட்பட எந்தத் தலைவர்களின் கொள்கைகள், முடிவுகள் குறித்தும் விமர்சனம் செய்வதை நான் எதிர்ப்பதில்லை. ஆனால், அவை தவறான தகவல்களின் அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதே என் கருத்து.

இந்நூலை வாசிக்கும் இளைஞர்கள் இதை உண்மை என்று நம்பி விடும் வாய்ப்பை உண்டாக்கி விடுகிறது. 


நன்றி.


அன்புடன்,

சீ.இளங்கோவன்

12.3.2026

சேலம் -7


இந்த வாசகரின் நாவல் குறித்த சிறப்பான கருத்துகளுக்கும் 

பிழையென சுட்டி காட்டியமைக்கும் 

 நன்றி சொல்ல விரும்புகிறேன்.  உண்மையில் என் கடந்த நாவல்களை விடவும் இந்த நாவலில்தான் பிழை திருத்தம் சிறப்பாக இருந்தது..  என்றாலும் அதையும் தாண்டி நண்பர் இளங்கோவன் அவர்கள் சுட்டிக்காட்டிய சிலதை  நானும்... எனது நியாயமான விளக்கத்தை அவரும் ஏற்றுக்கொண்டோம் ...  முடிவில் எழுத்தாளன் வாசகர் என்ற நிலையிலிருந்து இப்போது தோழமை மிக்க நண்பர்களாகிவிட்டோம்.


  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டுமென அம்பேத்கரும் அது கூடாது என காந்தியும்  1931 இங்கிலாந்து பிரதமர் மெக்டொனால்டு  முன்னிலையில் வைத்த வாதங்களில் முடிவு எட்டபடாமலே நாடு திரும்பிய நிலையில் மெக்டொனால்டு  சாதிகொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வந்த  தீர்ப்பால்   இந்திய மக்களில் பிளவு உண்டாக்கும் என்று காந்தி உண்ணா நோன்பு இருந்தது குறித்த உரையாடல்  பகுதியின்  வரலாற்றை சுட்டிக்காட்டினார்...  எங்கள் இருவர்  வாதத்துக்கு பிரதமர் எடுக்கும் முடிவை ஏற்கிறேன் என்ற வகையில் காந்தியின் ஒப்புதல் இருந்ததாக  இருந்த எனது புனைவை வரலாற்று பார்வையில் வாசகர் மறுத்தார்... இந்த மாதிரி உரையாடல்  வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையில் நடக்க வேண்டும்..  எனக்குப் பல முறை நடந்திருக்கிறது ஆனால் இதை பதிவிட விரும்ப காரணம் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஒரு வாசகர் மொழி குறித்தும் இலக்கியம் குறித்தும் வரலாறு குறித்தும் இவ்வளவு அக்கறையுடன் செயல்படுவது  என் தரப்பு நேர்மையான விளக்கத்தை அதே நேர்மையுடன் ஏற்பது அதை அன்புடன் வரவேற்பது என்கிற அவரது பண்பு எனக்கு ஆச்சரியம், புனைவு என்கிற பெயரில் வரலாற்றை திரித்துவிடக் கூடாது என்பது நியாயமே!  முடிவில் நாங்கள் நண்பர்களானோம்.  


அதே நேரம் இலக்கிய புனைவில் மிக கறார் தன்மைகள் 

அதுவும் ஒரு மாய யதார்த்ததம் வகை படைப்பில் அவசியமில்லை என்று வாதிட வாய்ப்புண்டு ஆனால் எல்லாமே விதிகளுக்குட்பட்டே இயங்கும் படைப்புக்கும் அது பொருந்தும் என்பதை தெளிவாக புரிந்தவன் என்ற முறையில்  உண்மையான இலக்கிய அக்கறையுள்ள வாசகரிடம் அத்தகைய வாதம்  சரியல்ல என்பது என்பது என் கருத்து...

அன்புடன்.

Comments