போர் தொடங்கி4 வது
வாரத்தில போர் நிறுத்தம்
உலகில் பல போர்கள் நடந்திருக்கிறது
எந்த போர் நடந்தாலும் போரில் வெற்றி பெற்றவரை உலகின் வலிமையான அடையாளமாக புரிந்துக்கொள்ளப்படும்
அப்படித்தான் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்கள் பலங்களை
நிரூபித்து உலக வல்லரசுகளாக அடையாளம் பெற்றன. அதுவரை உலகை காலனி ஆதிக்கத்தின் அடிப்படையில்
அடக்கியாளும் பேரரசுகளாக பிரிட்டனும், பிரான்சும், ஜெர்மனியும் இட்டாலியும் உலகின்
பெரும் பகுதியை ஆண்டு கொண்டு இருந்தன... பிரிட்டனுக்கு சூரியனே மறையாத நாடு என்ற
பெயரும் இருந்தது.
ஆனால் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின்
ஜெர்மனியால் பிரிட்டனும் பிரான்சும் மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளாகின... ஜெர்மனின்
தாக்குதலில் ஐரோப்பாவே நிலைகுலைந்து போனது அவர்களை அச்சத்தில் ஆழ்த்திவிட்டு அது பேராசையுடன்
ரஷ்யாவுக்குள் 1941-6-22 ல் பயங்கர பாய்சலுடன் நுழைந்தது.
ஹிட்லரின் தோளோடு தோல் நின்று ஒரு
இணையாக உலகை ஆளும் சக்தி இத்தாலியருக்கு மட்டுமே உண்டு என்று பாசிசத்தை ஒரு
தத்துவமாக உலகில் நிலை நிறுத்த ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை அச்சுறுத்திய
முசோலினி.. தன் சொந்த மக்களாலேயே சுடப்பட்டு பெட்ரோல் பங்க் ஒன்றில் தன்
காதலியுடன் தலைகீழாக தொங்க விடப்பட்டார்..
ஹிட்லர் என்ற நாஜித் தலைவன் உலகையே
அச்சுறுத்தினாலும் சோவியத் ரஷ்யாவின் வீதிகளில் தான் கைதியாக இழுத்து
செல்லப்படக்கூடாது என்ற காரணத்திற்காகவே 1945-4-30 ல் தற்கொலை செய்து கொண்டதுடன்
தன் காதலி மற்றும் தான் வளர்த்த நாய் உட்பட தற்கொலை செய்துக்கொண்டார் சோவியத்
ரஷ்யாவின் படை வீரர்களின் கைகளில் வெறும் சாம்பலாக தான் கிடைத்தார்...
இப்படி ஐரோப்பா உலகின் வல்லரசாக இருந்த
நிலை மாறி ரஷ்யாவும் அமெரிக்காவும் உலகின் வல்லரசென மக்கள் அறிந்து கொண்டது
இரண்டாம் உலகப்போரில் தான்...
அதே போல தான் மத்திய கிழக்கில்
அச்சுறுத்திக் கொண்டிருந்த இஸ்ரேல் என்கிற ராணுவத்தின் பலம் மற்றும் அதன் பலம் பொருந்திய ராணுவத்தை எதிர்கொள்ளும்
தற்காப்பு நவீனஅமைப்புகள் கொண்ட ஒரு நாடுஎன உலகம் கொண்டிருந்த கருத்தை இந்த போர் முடிவுக்கு
கொண்டுவந்திருக்கிறது. அமெரிக்க துணையுடன் பாலஸ்தீனத்தை சுடுகாடாக மாற்றிய
இஸ்ரேலியர்கள் தாங்கள் மட்டுமே உலகின் மிகப்பெரிய அறிவு சமூகம் என்று
கொக்கரித்துக் கொண்டிருந்தார்கள் அதை உலகமும் நம்பியது ஆனால் மத்திய கிழக்கில்
நடந்த இந்த போர் அந்த கற்பிதத்தை ஒன்றுமில்லாமலாக்கிவிட்டது.
போருக்குள் வலுக்கட்டாயமாக
இழுக்கப்பட்ட அல்லது வலுசண்டைக்கு இழுக்கப்பட்ட ஈரான் தனது எதிர்தாக்குதலின் மூலம்
மத்திய கிழக்கின் மிகப்பெரிய ராணுவ பலத்தை
நிரூபித்து விட்டது அமெரிக்கா போரை operation epic fury அதாவது வீரமிகு
ஆவேச தாக்குதல் என்ற பெயரில் ஆர்பாட்டமாக ஆரம்பித்து இப்போது
தற்காலிகமாக என்றாலும் போர் நிறுத்தத்தை சுயமாகவே அறிவித்துவிட்டது அது மட்டும்
இல்லாமல் போர் நடந்த காலத்தில் உலகையே பிரமிப்புக்குள்ளாக்கிய மிகப்பெரிய விமானம்
தாங்கி கப்பல்கள் ஆன ஆபிரகாம் லிங்கன் போர்டு விமானம் தாங்கிய
கப்பல்கள்
ஈரானின் தாக்குதலுக்கு அஞ்சி பாதுகாப்பான தூரத்துக்கு நகர்த்தி செல்லப்பட வேண்டிய
கட்டாயத்துக்கு உள்ளாகின.. இதையெல்லாம் உலகம் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆனால் ஈரான் தனது ராணுவ வலிமையை தனது ராணுவ தந்திரத்தை தனது ராணுவ அறத்தை தனது
ராணுவ பாய்ச்சலை இந்த உலகுக்கு மிக அற்புதமாக நிகழ்த்தி காட்டிவிட்டது இஸ்ரேலை அது
மிகச் சிறப்பாகவே பதம் பார்த்து ஒரு அருமையான ராணுவ பதிலை அளித்துவிட்டது.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கேடயமான
ஐரன் டோம்கள் அதன் ரேடார் அமைப்புகள் ஒன்றுமில்லாதவையாக ஆக்கப்பட்டு விட்டது.
அமெரிக்காவின் பயங்கர பறக்கும் ராணுவ
விமானங்கள் பி-35, பாதுகாப்பு ரேடர்கள் அத்தனையும் முடக்கப்பட்டு விட்டது அல்லது
தாக்கி அழிக்கப்பட்டது. இதையெல்லாம் போருக்கு முன் உலகம் யோசித்துக் கூட
பார்த்திருக்கவில்லை. தன் நாட்டுக்குள் எதிரியின் வான் பரப்பு ஆயுதங்கள் எதுவும்
நுழைந்து விட முடியாது என்று இறுமாந்திருந்த இஸ்ரேல் நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்ட
காட்சிகளை உலகம் பார்த்தது ஒரு கட்டத்தில் நிதன்யாஹு எங்கிருக்கிறார் என்பதே
தெரியவில்லை அந்த அளவுக்கு அது வாங்கிய அடி பயங்கரமான ஒன்று இத்தனையும் சாதித்த
ஈரானின் உச்ச நிலை தலைவர் கமேனி அவர்கள் போர் துவங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே
கொல்லப்பட்டு விட்டார் என்ற நிலை போர் குறித்த பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பெரிய
பதட்டத்தை உருவாக்கியிருந்தது ஆனால் அன்றிலிருந்து ஈரான் அமெரிக்க படைத்தளங்கள்
இஸ்ரேலிய நகரங்கள் என தனது வானவேடிக்கை தாக்குதல்களை ஈரான் மிகுந்த துல்லியத்தோடு
நவீன நுட்பங்களோடு தன் தோழமைகளின் தொழில்நுட்ப உதவியோடு சாதித்து காட்டிவிட்டது
இதையெல்லாம் பார்க்கும் போது இன்றைய நிலவரப்படி ஈரான் வலிமை மற்றும் நுட்பத்தால் போரில்
மிஞ்சி நிற்கிறது என்பதை உலகம் அறிந்து கொண்டது.. என்பதை விடவும் இஸ்ரேல் மற்றும்
அமெரிக்க கப்பல்கள் தவிர மற்ற எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் வழியாக எண்ணெய்களை
எடுத்து செல்வதற்கு தடை இல்லை என்ற அறிவிப்பும், அமெரிக்காவுக்காவின் இராணுவ
தளங்களை வரவேற்காத எந்த பக்கத்து நாட்டின் மீதும் நாங்கள் தாக்குதல் தொடுக்க
மாட்டோம் என்ற அறிவிப்பும் ஈரானின் ஆளுமையை காட்டியுள்ளது. புதிய புதிய
யுக்திகளோடு அலை அலையாக எதிரிகளை தாக்கிய பண்பு எதிரிகளின் ட்ரோன்களை வழிமறித்து
அவற்றை பத்திரமாக தரையிறக்கி கையகப்படுத்திய தொழில்நுட்பம் 1800 கி-மீ தொலைவில் உள்ள
இலக்குகளை 10..15 அங்குல இடைவெளி வித்தியாசம் கூட
இல்லாமல் எதிரிகளின் நிலைகளை தாக்கிய தொழில்நுட்ப ராணுவ நடவடிக்கை என அத்தனையையும்
உலகம் வியக்கும் அளவுக்கு ஈரான் செய்து காட்டிவிட்டது.
இதில் தோற்றவர் யார் ஜெயித்தவர் யார்
என்பதை உலகம் அப்பட்டமாக பார்த்துவிட்டது இப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐந்து
நாட்களுக்கு தற்காலிகபோரை அறிவித்திருக்கிறார்.... அவர் வலுவாக இருந்திருந்து ஈரான்
தற்காலிக போர் நிறுத்தம் கேட்டிருந்தால் அனுமதித்திருப்பாரா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அவர்
போர் துவங்கியதிலிருந்து விதவிதமான வார்த்தை ஜாலங்களால் போர் குறித்து கவனிக்கும்
பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகைப்புக்கு உள்ளாக்கி விட்டார்...
என்றாலும் அவர் ஒரு சிறந்த வியாபாரி
என்ற முறையில் போர் தனக்கு சாதகமாக இல்லை மேலும் அது தன் நிலையை மிகுந்த
சங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டது என்ற நிலையில் இஸ்ரேலுக்கே ஒரு கட்டத்தில் ஈரானின்
சில இடங்களை தாக்க கூடாது என்று கட்டளை இடும் அளவுக்கு போய்விட்டார் என்பதை உலகம்
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த பயங்கரமான போர் எதை நிறுவி
இருக்கிறது என்றால் ஈரானின் வான்வழி தாக்குதல் அதன் துல்லியம் அதன் புதிய புதிய
ஏவுகணைகள் அதனிடம் 4000 கிலோமீட்டர் தாண்டி தாக்கும் அதிநவீன
ஏவுகணைகள் அதை உலகின் கண்களுக்கு தெரயாமல் வைத்திருந்ததென தற்காப்பில் மட்டுமல்ல எதிர்
தாக்குதலிலும் பல சாதனைகளை அது உலகுக்கு காட்டிவிட்டது போரில் விஞ்சியும்
நிற்கிறது என்பது உலகம் வெளிப்படையாக பார்த்த ஒரு உண்மை
அதேநேரம் இஸ்ரேல் மிக மோசமான
தாக்குதலுக்கு உள்ளாகி ஈரான் போர் விதிகளை மீறி செயல்படுகிறது என்று கதறும்
நிலைக்குப் போய்விட்டது அது மட்டும் அல்லாமல் அதன் வான் பாதுகாப்பு சாதனங்கள்
இப்போது கடந்த காலத்து பொருட்களாக ஆயுதங்களாக தற்காப்புக் கருவிகளாக மாறிவிட்டது. இஸ்ரேலின்
தலைவர் நெதன்யாகூ பதுங்கியிருக்க வ்வேண்டிய நிலையும் உருவானது. அதைவிடவும்
இப்போதைய நிலை இஸ்ரேலை கண்டு அண்டை நாடுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை இஸ்ரேல்
அவ்வளவு வலுவான இடத்தில் இல்லை என்பதை உலகம் மட்டும் அல்ல மத்திய கிழக்கும்
புரிந்து கொண்டு விட்டது.. இஸ்ரேல் மக்கள் தாக்குதலுக்கு அஞ்சி தங்கள்
இருப்பிடங்களை விட்டு மலைகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் தப்பி ஓடிய காட்சியை
உலகம் பார்த்து விட்டது இதை தான் பாலஸ்தீன மக்களும் வெகு காலமாக அனுபவித்து
வருகிறார்கள் இது உங்களுக்கு ஒரு பாடம் என்று உலகம் சொல்லும் அளவுக்கு இஸ்ரேல்
அவர்கள் நாட்டு மக்களை நிர்கதியாக்கிவிட்டது என்பது கண்கூடு.. முக்கியமாக
அமெரிக்கா தங்கள் பாதுகாவலன் என்ற எண்ணத்தை மத்திய கிழக்கு நாடுகள் இனி
வைத்திருக்கும் என்பது சாத்தியமில்லை...அமெரிக்கா தங்கள் மண்ணில் இருபதே தங்களுக்கு
ஆபத்து என்ற புரிதல் உருவாகிற சூழலே இப்போது.
அரபு நாடுகள் ஈரானை வியப்போடு
பார்க்கிறார்கள் அது மட்டுமில்லாமல் அவர்கள் ஈரானையே நமது பாதுகாவலனாக அறிவித்து
விடலாம் என்ற நிலைக்கு மத்திய கிழக்கு நாடுள் வந்திருக்கக்கூடும் ஆனால் மத்திய
கிழக்கு அதிகாரங்கள் அப்படி நினைப்பார்களா என்று நமக்கு தெரியாது ஏனனில் அண்டை
நாடுகள் போட்டி மனம் அப்படி நினைக்க சாத்தியப்படாதுஅதே நேரம் ஈராக்கின் வல்லமையை
மத்திய கிழக்கு நாடுகள் உணர்ந்து கொண்டு விட்டன. அமெரிக்காவை நம்பி அவர்கள்
கைவிடப்பட்டதையும் அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
பாலஸ்தீனத்துக்கு எதிராக கொடூரமான
செயல்களை இஸ்ரேல் செய்த போது வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது அதற்கான பலன்களை
அனுபவித்து விட்டார்கள் என்றுதான் நாம் நினைக்க முடிகிறது. இப்படியாக இந்தப் போர்
ஒரு வெளிப்படையான வரைபடத்தை உலகுக்கு புதிதாக வழங்கியிருக்கிறது. வரைபடத்தில்
ஈரான் மிக பலமான ராணுவ பலம் பொருந்திய நாடாக உலகில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் கேலிக்கூத்தாக மாறிவிட்டது இஸ்ரேலின் கதறல்கள் ராணுவ ரவுடிகளுக்கான தகுந்த பாடமாக ஜனநாயகத்தை விரும்பக்கூடிய அநீதிக்கு எதிரான மக்கள் உரக்க சொல்ல வாய்ப்பளித்துள்ளது. இதையெல்லாம் தாண்டி ரஷ்யா சீனா போன்ற நாடுகள் நியாயத்தின் பக்கமாக நின்று ஈரானுக்கு எல்லை மீறாமல் தங்கள் ஒத்துழைப்பை நல்கி இருக்கிறார்கள் என்பது மட்டும் அதிகாரபூர்வமான அறிவிப்பாக இல்லாமல் வெளிப்படையாகவே தெரிகிறது இது நியாயம் உள்ள சமாதானமுள்ள சமாதானத்தை விரும்புகிற உலக மக்களுக்கு ஒரு பெரிய ஆறுதல். அதைவிடவும் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் செயலுக்கும் இஸ்ரேலின் செயலுக்கும் கண்டனம் தெரிவித்ததுடன்... இந்தப் போரை கண்டித்து இந்த போரில் அமெரிக்காவின் பக்கம் நாங்கள் நிற்கப் போவதில்லை என்றும் வெளிப்படையாக அறிவித்து விட்டார்கள் குறிப்பாக ஸ்பெயின் இப்படி பல்வேறு உலக கவனத்தோடு இந்த போர் நிறுத்தம் வந்திருக்கிறது இந்த ஐந்து நாட்களில் என்ன நடக்கிறது என்று நாம் பார்ப்போம் மீண்டும் மீண்டும் நாம் விரும்புவது போர் மக்களின் நலனுக்கானதல்ல மக்களை அழித்தொழிப்பது போர் வியாபாரிகளின் நலனுக்கானது முதலாளிகளின் நலனுக்கானது போர் வெறியர்களின் மனநலக் கேட்டை உலகுக்கு அறிவிக்க க்கூடியது என்பதை தவிர போர் வேறு ஒன்றுக்குமானது அல்ல போரை நாம் வெறுக்கிறோம் ஐந்து நாள் போர் நிறுத்தமல்ல எப்போதும் போர் தேவை இல்லை என்பதே நம் கருத்து. போர் உலகில் அநீதியான ஒன்று அயோக்கியர்களே போரை துவக்குகிறார்கள், பிறகு அவர்களே அந்தப் போரில் தோற்று ஓடுகிறார்கள் அல்லது சாம்பல் ஆகிறார்கள் என்பதுதான் உலக வரலாறு அந்த வரலாற்றின் ஒரு துளியை இப்போது உலகம் மீண்டும் வெளிப்படையாக பார்த்து விட்டது... போர் வேண்டாம்.



Comments
Post a Comment