போர் எங்கு நடந்தாலும் கடைசி மனிதனுக்கும் பாதிப்பு
போர் எங்கு நடந்தாலும்
கடைசி மனிதனுக்கும் பாதிப்பு
இப்போது உலகில் நடந்து கொண்டிருக்கும் போரில் நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமில்லை... நம் சமையலறைக்கான கேஸ் கட்டுப்பாடு நம் நகர்வுக்கான பெட்ரோல் தட்டுப்பாடு என நாம் போரில் பார்வையாளர்கள் என்ற நிலையிலிருந்து இப்போது அதன் விளைவுகளின் பங்கேற்பாளர்களாகவும் மாறியிருக்கிறோம்..
என்றாலும் இந்த போரை நாம் எப்படி புரிந்து கொள்வது, ஒட்டுமொத்த இந்தியர் சார்பாக புரிந்து கொள்வதா அல்லது இந்தியரில் ஒரு குறுகிய லாபம் அடையும் தொகுதியினரை வைத்து புரிந்து கொள்வதா அல்லது உலக நியதியுடன் புரிந்துக்கொள்வதா? என்ற கேள்விக்கு பதில் நான் இந்திய பிராந்திய நலன்களை மனதில் வைத்து இந்தியர் நலனை மனதில் வைத்து இந்தப் போரின் நீதி அநீதி என்கிற வரையறைகளுக்கு உட்பட்டு சிந்தித்தாலும், இந்த போரை துவக்கியவர்களே நம் முதல் எதிரி அத்துடன் போருக்குள் இழுக்கப்பட்ட ஈரான் நமக்கு எரி பொருள் தேவைகளை வழங்குகிற நாடு என்ற பார்வையில் இருந்தும் பார்க்க வேண்டும், அதே நேரம் அமெரிக்கா ஈரான் மீது ஏன் போரை திணித்தது? இஸ்ரேலின் வழியாக அதற்கு மத்திய கிழக்கில் ஒரு போர் ஏன்? தேவைப்பட்டது என்று யோசித்தால் அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு மிக மலிவு விலையில் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்கள் வேண்டும்... இஸ்ரேலுக்கு தனது சின்னஞ்சிறு நிலப்பரப்பை அகலமாக்கி தனது ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் பாலஸ்தீனம் என்ற ஒன்றை இல்லாமலாக்கி தன் பலத்தை நிலைநாட்ட வேண்டும்... அவர்களது அத்துமீறிய போருக்கு அதுதான் முக்கிய காரணம்.
ஆனால் பழமையான நாகரீகத்தை கொண்ட ஈரானுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்... அதே நேரத்தில் தன்னை பலவீனமாக கருதி எதிரிகள் அடிக்கடி தம்மை சீண்டக்கூடாது என்பதற்காக தன் பலத்தை எதிரிகளுக்கு மட்டுமல்ல உலகுக்கும் காட்ட வேண்டும் என்கிற தேவையிருக்கிறது. இதில் யார் அபகரிக்கும் ஆக்ரமிப்பு சண்டையை தொடங்கியது. யார் அதை எதிர்த்து சக்தியோடு தன்னை தற்காத்துக் கொண்டது என்ற போக்கில் தான் இந்தப் போரை நாம் நியாயமாக பார்க்க வேண்டும்.
ஈரான் நமக்கு எப்போதும் எதிரியாக இருந்ததில்லை.
ஆனால் அமெரிக்கா நம்மை பற்றி என்ன நினைக்கிறது. இந்தியா அணுசக்தி வல்லமை பெறுவதையோ, விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதையோ இந்தியா தனித்த ஒரு வல்லரசாக உரு பெறுவதையோ அமெரிக்கா ஒருபோதும் விரும்பிய நாடு கிடையாது. அது நமக்கு கிரியோஜெனிக் என்ஜினை ரஷ்யா தருவதை கூட தடை செய்த நாடு. விண்வெளி துறையில் நாம் வளர்வதை விரும்பாத காலத்தில் ரஷ்யா தான் நமது ராகேஷ் சர்மா என்கிற ஒரு விண்வெளி வீரனை தனது விண்களத்தில் விண்வெளிக்கு அனுப்பியது... இந்த வரலாற்று பின்புலங்களை எல்லாம் தாண்டி ரஷ்யா நீண்ட நெடுங்காலமாகவே நம்மோடு நட்புறவாக இருக்கிற ஒரு நாடு. நமக்கு மலிவு விலையில் பெட்ரோல் தந்த நாடு அந்த நாட்டுடன் எண்ணை வாங்க குறுகிய காலத்துக்கு அமெரிக்கா நமக்கு அனுமதி தருவதாக சொல்வது இந்திய இறையாண்மை குறித்து அமெரிக்கா பலவீனமாக கருதுவதையே காட்டுகிறது. அதை எதிர்ந்து கண்டனம் தெரிவிக்காமல் அதையே ராஜ தந்திரமென கூத்தாடுபவர்களை நாம் என்ன சொல்வது.
ஆனால் இன்று குறுகிய நலன்களுக்காக இந்திய வெளியுறவுத்துறை அதை இயக்குகிற பிரதமர் மோடி என எல்லோரும் போர் வுறியுள்ள இஸ்ரேலையும், அமெரிக்காவையும் அண்டி இருப்பது ஏன்? ஈரான் பெட்ரோல் வேண்டும் ஆனால் ஈரான் எதிரி என்ன மாதிரியான பார்வையிது... மதரீதியாக ஒரு நாட்டை அனுகுவதா அரசியல் ரீதியாக அனுகுவதா என்கிற குழப்பம் ஒரு பக்கம் அமெரிக்க இஸ்ரேல் நிர்பத்தம் மறு பக்கம். அடுத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்தால் இரண்டு நாளில் ஈரானின் கதை முடிந்துவிடும் என்ற இந்திய ஆட்சியாளர்களின் தப்பு கணக்கு... இதில் வெளிப்படையாக தெரிகிறது.
நாம் மத்திய கிழக்கில் உள்ள ஈரான் தாக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்திருக்க வேண்டும் இப்போதும் அவர்கள் அனுப்புகிற எண்ணை தான் நமக்கு உதவியாக இருக்கப் போகிறது அவர்கள் நமக்கு கப்பலை அனுமதிக்கிறார்கள் என்று பொய்யான கதைகளை அளக்கும் அளவுக்கு தான் இந்திய சூழல் இந்திய ஊடக உலகத்தின் பித்தளை மாத்தி தனம் இருக்கிறது... இதையெல்லாம் கணக்கில் வைத்து இந்த போரை பார்க்கும்போது... இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க நீர் மூழ்கி கப்பலால் தாக்கப்பட்ட ஈரான் போர்கப்பல் குறித்து அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். போரின் ஆரம்பத்தில் ஈரான் மாணவிகள் கொல்லப்பட்டதற்க்கும் , கமேனி கொல்லப்பட்டதற்க்கும் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். இவ்வளவிற்கும் பிறகும் இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை எண்ணையுடன் போக ஈரான் அனுமதிக்குமென எப்படி எதிர்பார்க்க முடியும்.
இவ்வளவு நாள் நடந்த சண்டையில் தன்னை தற்காத்துக் கொள்ளவும் எதிரிகளை நிலைகுலைய வைக்கவும் செய்த ஈரான் இப்போது போர் முடிவுக்கு வந்தால் கூட இஸ்ரேலையும் அமெரிக்க ராணுவத்தையும் விஞ்சியே நிற்கும்... ஏனெனில் இஸ்ரேலிய அமெரிக்க தற்காப்பு நிலைகளை ஈரான் மிக வலிமையோடு பந்தாடியிருக்கிறது என்பதுதான் எதார்த்த உண்மை... இப்படி எல்லாம் நடக்கும் என்று இஸ்ரேலும்< அமெரிக்காவும் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை ஏன் இந்திய ட்சியாளர்களும்தான்! அமெரிக்கா தனது பிரம்மாண்டமான போர் கப்பல் ஆப்ரகாம் லிங்கனை ஆபத்து எல்லைக்கு வெளியே நகர்த்தி கொண்டு போய் இருக்கிறது.
இஸ்ரேலியர்கள் உயிர் தப்ப பதுகுழிகளுக்கும், மலைகளுக்கும் தப்பி ஓடுகிறார்கள்... அதே நேரம் ஈரானுக்கு பாதிப்பு இல்லையா என்றால் நிச்சயம் பாதிக்கப்பட்டு இருக்கும் அது தன் உச்ச அதிகாரமுள்ள தலைவரை முதல் இரண்டு நாள்களிலேயே இழந்து விட்டது. என்றாலும் அது அலை அலையாக முப்பதுக்கு மேற்பட்ட பெரும் தாக்குதல் ஏவுகணை தாக்குதல் அலைகளை நிகழ்த்தி உலகை திரும்பி பார்க்க வைத்துவிட்டது... உண்மையில் இந்த போர் எனக்கு தான் வெற்றி என்று அமெரிக்கா சொல்லிக் கொள்வது என்பது என் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற நம் உள்ளூர் பழமொழியை தான் நினைவுகொள்ள வைக்கிறது. இனி போரின் போக்கு நீயா அல்லது நானா என்று பார்த்து விட வேண்டும் என்ற நிலைக்கு தான் அமெரிக்காவையும் ஈரானையும் நகர்த்தும் ஏனெனில் போர் அந்த நிலைக்குப் போய்விட்டது.. இருவருமே இறங்கி வந்து ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை இப்போது கொஞ்சம் குறைந்து இருப்பதாகவே ஒரு பார்வையாளராக நமக்கு தோன்றுகிறது.
ஈரானுக்கு இப்போதைய தேவை இந்த மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா என்ற அந்நிய நாட்டின் ஊடுருவலை முற்றிலுமாக ஒழித்து கட்டி விட வேண்டும் அவர்கள் மத்திய கிழக்கின் பக்கம் தலை வைப்பதற்கு வருங்காலத்தில் யோசிக்க வேண்டும் என்கிற நிலைக்கு அவர்களை கொண்டு வர வேண்டும் என்பது ஈரானின் திட்டமாக இருக்கலாம் அதே நேரம் நமக்கு பாதுகாவலன் இனி அமெரிக்க நிலத்திலிருந்து வரத் தேவையில்லை நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும் அந்த நாம் என்பது ஈரான் தான் என்பதை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அறிவுறுத்த வேண்டிய கட்டாயத்திலும் ஈரான் இப்போது இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் எண்ணை வளங்கள் குறித்த அதிகாரங்கள், பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஒரு நியாயமான எதிர்கால நடைமுறை ஒப்பந்தங்களுக்கு வருவார்கள் பாதுகாப்பு, மற்றும் ராணுவ பலம் உட்பட ஈரான் தலைமை வகிக்கும் நிலைக்கு இப்போது உலகை கவனிக்க வைத்திருக்கிறது. உலகை மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வலம் கொண்ட நாடுகளையும் ஈரான் ஆச்சரியமாக பார்க்க வைத்திருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. இஸ்ரேல் பலமாக உருகுலைந்திருந்தாலும் உலகம் முழுக்க அது குவித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து மீண்டு எழுந்து விடும் ஆனால் மீண்டும் ஒருமுறை அது ஈரானுக்கு எதிராக போர் குரலை நீட்டும் துணிவுக்கு வராது என்கிற நிலைமைக்கு இஸ்ரேல் இப்போது.. இஸ்ரேலுக்கு கூடுதலாக இன்னும் அழுத்தமான பாடத்தை கற்பிக்க ஈரான் விரும்பக்கூடும் ஏனெனில் அதற்கு அது சாத்தியமும் வாய்ப்பும் கூட...
இப்போது இஸ்ரேல் முழுக்க முழுக்க அமெரிக்க பலத்தில் மட்டுமே நிற்கிறது.. அதன் தொழில்நுட்பங்கள் இப்போது அதை கைவிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன. கட்டிக் காப்பாற்றிய பாசாங்கான வலிமை, இடைமறித்து தாக்கியழிக்கும் தொழில் நுட்பம் அனைத்துமே தோல்வியில்தான் முடிந்திருக்கிறது.. அதே நேரம் ஈரான் தனது வலிமையை காட்டி இருக்கிறது. அதற்குப் பின்னணியில் மிக அழுத்தம் திருத்தமான உலகின் மிகப்பெரிய வல்லரசுகள் தங்கள் கரங்களை கோர்த்திருக்கின்றன அதை அவை வெளிப்படையாகவும் சொல்லவும் செய்கின்றன, ரஷ்யாவும், சீனாவும் ஈரானின் பங்காளிகளாக இருக்கும் வரை ஈரானை அசைப்பதற்கு அமெரிக்காவால் ஒரு போதும் முடியாது என்பதுதான் நமது கணிப்பு... வடகொரியாவும் ஈரானின் பலமான எதற்கும் துணிந்த நண்பனாக இருக்கிறது இந்த சூழலில் கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் ஆன தோழமையும் வளர ஆரம்பித்தால். அமெரிக்கா ஒரு பாதுகாவலனாக மத்திய கிழக்கில் கோலோச்சுகிற பாசாங்கு நடக்கவே நடக்காது என்பதை தான் இந்த இஸ்ரேலிய அமெரிக்க ஈரானிய போர் உலகுக்கு தந்திருக்கிற செய்தி....இந்நிலையில் இந்தியாவின் பிராந்திய நலன்கள் கருதியும் தனது பாரம்பரியமான அண்டை நாடுகளுடன் தோழமை, பாதுகாப்பு, தன்னாட்டின் பாதுகாப்பு, இதையெல்லாம் கருத்தில் கொண்டு யார் எதிரி? யார் நண்பன்? யார் வர்த்தக கூட்டாளி< யார் ராணுவ கூட்டாளி என்பதை எல்லாம் ஒரு மறுபரிசீலனைக்கு வரவேண்டிய கட்டாயத்துக்கு இந்திய மக்கள் ஆட்சியாளர்களுக்கு நெருக்குதலை தருவார்கள்.. இந்தப் போர் உண்மையில் ராணுவ நடைமுறை சாத்தியங்கள், போரில் ஈடுபட்டுள்ள நாடுகளின் தொழில்நுட்ப போர் தளவாட சக்திகள் அனைத்தையும் அப்பட்டமாக உலக மக்களுக்கு சாட்சியளித்து விட்டது.. இனி பொய்ப்பித்தலாட்ட கூச்சல்கள் நகைச்சுவையை தான் உண்டு பண்ணும் என்கிற நிலைமை இந்தப் போர் உருவாக்கி இருக்கிறது... இந்தப் போர் விமானங்களை விடவும் ஏவுகணைகளே இனி உலகின் அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகளின் வல்லமையை தீர்மானிக்கும் என்கிற ஒரு அப்பட்டமான உண்மையை இந்த போர் சொல்லி இருக்கிறது.
அதே நேரம் முன் எப்போதையும்விட வருங்காலத்தில் ஏவுகணைகளின் நுட்பங்கள், வலிமை, துல்லியம் அனைத்தும் மிக பாய்ச்சலாக வளர்ச்சி அடையும்.. காரணம் தேவை தானே நுட்பங்களை வளர்த்தெடுக்கிறது அந்த விதத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் தங்கள் பழைய மேதமை கனவுகளிலிருந்து புதிய நுட்பங்களுக்கு தாவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் அதற்கான கால அவகாசமாக இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் வராமல் போனால் அதன் நிலைமைகள் என்னவாக இருக்கும் என்பதை பற்றி நாம் அடுத்தடுத்து சிந்திக்க வேண்டும்... ஏனெனில் போர் தான் இப்போது நமது சமையலறை எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணமாக இருக்கிறது. அது வேறு பல தட்டுப்பாடுகளுக்கும் விலை உயர்வுக்கும் தனிமனித பொருளாதார நெருக்கடிகளுக்கும் கொண்டு வந்து விடும் அதனால் இந்த போரை நாம் உண்மையாக புரிந்து கொள்வது என்பது மிக முக்கியமானது. போர் மிக விரைவில் முடிவுக்கு வர வேண்டும்..
போர் மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி..
போரை உருவாக்குபவர்கள்,
போரை கனவு காண்பவர்கள் தான் மனித குலத்தின் உண்மையான எதிரிகள்... சீக்கிரம் போர் முடிவுக்கு வரட்டும் .



Comments
Post a Comment