குடியரசை நாம் புரிந்துக்கொண்டோமா?
அனைவருக்கும் குடியரசு தின
வாழ்த்துக்கள்
குடியரசு என்பது என்ன? முடியரசு என்பதிலிருந்து
எதிர் தத்துவ நிலையைக் கொண்டது குடியரசு.
குடியரசில் அனைத்து குடிமகனும் சம
அளவில் நாட்டின் அனைத்திலும் அதிகாரம் கொண்டவன்.
குடியரசில் குடி மக்களுள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு சட்டப்படி தடை செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டம் அதை உறுதிப்படுத்துகிறது.
ஆனால் நிலைமைகள் அப்படி இருக்கிறதா
அதிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தார் அதிகம் இடம் பெறுவதால் அந்த சமூகம் தான்
மறைமுகமாக ஒட்டுமொத்த நாட்டையும் ஆளுவதை நம்மால் மறுத்து விட முடியுமா உயர் கல்வி
நிலையங்கள் உயர்த்துக்கூடங்கள், அதிகாரத்தில் உள்ள நீதித்துறை, காவல்துறை, மற்றும்
விருதுகள் வழங்கப்படும் குழுக்கள் வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு
ராணுவங்களுடன் சண்டையிடும் இந்திய ராணுவத்துக்கு ஆலோசனை சொல்பவர்கள், வெளியுறவு
துறை அமைச்சர்கள் அனைத்து மாநிலங்களின் செயலாளர் என எல்லோரும் ஒரு குறிப்பிட்ட
சமூகத்தை சார்ந்தவர்களாகவே திரும்பத் திரும்ப வருவதும் குறிப்பாக காவல்துறையில்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் திரும்பத் திரும்ப அதிகாரத்துக்கு வருவதும் இந்த
குடியரசின் கேடாக இருப்பதை நாட்டு மக்கள் உணரவே சக்தியற்றவர்களாக அல்லது அதை ஒரு
பேசு பொருளாக அதை மாற்றாமல் இருக்கிறார்கள்...
அதன் விளைவு அதன் பாதிப்பு 140 கோடி மக்களின் 85 சதவீத மக்களை சென்றடைகிறது ஆனால் இந்த
சூழலில் தான் 140 கோடி பேரும் ஒரே குரலில் குடியரசு வாழ்க
என்று குரலெழுப்பி ஒரு மனதாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்...
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாட்டின்
உயரிய மதிப்புக்குரிய ஒன்றாக கருதி தலை வணங்கி இந்த குடியரசை நாம் பெருமிதத்தோடு
கொண்டாடும் விரும்புகிறோம் ஆனால் மேற் சொன்ன குளறுபடிகள் இந்த நாட்டில் என்ன
விளைவுகளை உண்டாக்குகிறது.. அப்படியான குளறுபடிகுக்கு எது காரணம்?
ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் தான்
கல்வியில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில்
அனைத்து சமூகத்திலும் கல்வியாளர்கள் அறிவாளிகள் கண்டுபிடிப்பாளர்கள் விளையாட்டு
வீரர்கள் சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் மருத்துவர்கள் ஆயிரமாயிரமாய் இருக்கும்
போது எதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தாரிடம் மட்டும் அனைத்து அதிகாரங்களும் போய்
சேருகிறது. இங்கு எத்தனை ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் இருப்பதற்கான
காரணம் அதிகாரத்துக்குள் ஒரு அதிகாரம் என்பது போல ஒரு சமூக மயக்க சூழல் இங்கு
நிலவுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தார் அறிவாளிகள் போலவும் மற்றவர்களுக்கு அறிவு
இல்லாதவர்கள் போலவும் காட்சிகள் போலியாக திரித்து காட்டப்படுகிறது இந்திய உயர்
தொழிற் கல்வி கூடத்தில் மகத்தான பேராசிரியர்கள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்
என்கிற புலம்பல்கள் கேட்டபடியே இருக்கிறது. அறிவில் அவ்வளவு தகுதியற்றவர்கள் பதவிகளுக்கு
வருகிறார்கள்.. மகத்தான படைப்பாளிகள் கலைஞர்கள் விருதுகளில்
புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குரல்கள் கேட்டபடியே இருக்கிறது. இன்னும் எத்தனையோ
அநீதிகள் குடியரசு த்த்துவத்தை மாசுபடுத்தும்படி இருப்பதை நாம் பார்க்கிறோம்
உயர்நீதி மன்றங்கள் உச்ச நீதிமன்றம் இவற்றில்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தாரே அதிக உயர்ப்பதவிகளுக்கு வர முடிகிறது நீதிபதிகளாக
இருக்க முடிகிறது ஏன்? என்ற கேள்என்றவிகள் எல்லாம் இந்த குடியரசு நாளில் நாம்
திரும்ப நினைத்து பார்க்க வேண்டிய அதை மாற்றி அமைக்க வேண்டிய அது குறித்து
சிந்திக்க வேண்டிய ஒரு நாளாக நாம் எடுத்துக் கொள்ளாமல் வெறுமனே இசைக்கலைஞர்களால்
உருவாக்கப்பட்ட சினிமா பாடல்களை பாடி போலியாக சூழலை மடை மாற்றுவது வீண்
உண்மையில் இந்த நாட்டின் நிலைமை
என்னவாக இருக்கிறது சாதிய மதவாத அமைப்புகள் எவ்வளவு ரகசியமாக இயங்கி குடியரசு
என்று சொல்லை சீரழித்துக் கொண்டிருக்கின்றன புரட்சியாளர் அம்பேத்கரின் தலைமையில்
உருவாக்கப்பட்ட ஒட்டு மொத்த உலகமும் ஏற்றுக்கொண்ட இந்திய மக்களால் மதித்துக்
கொண்டாடப்பட வேண்டிய கொண்டாடப்படுகிற இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன நிலைமையில்
பின்பற்றப்படுகிறது. என்ன மாதிரியான ஆபத்துகள் எல்லாம் இந்த அதிகார மையங்களால்
உருவாக்கப்படுகின்றன...
வெளியுறவு கொள்கைகளில் இவர்கள்
எடுக்கிற முடிவு ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு சாதகமானதா அல்லது ஒரு குறிப்பிட்ட
சமூகத்தாருக்கு ஆதாயமானதா என்ற சிந்தனை எல்லாம் இன்றைய இளைஞர்கள் மாண்போடும்
அறிவோடும் நடுநிலைமையோடும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நாளாக நான் குடியரசு
தினத்தை பார்க்கிறேன் உண்மையில் குடியரசு குடியரசாக இருக்கிறதா?
என்ற கேள்வியை கேட்பதற்கு நமக்கு உரிமை
இருக்கிறது அந்த உரிமைக்கான நாளாக குடியரசு தின விழாவை நான் பார்க்கிறேன். இந்த அரசியல்
புரிதலுடன் ஒவ்வொரு இந்தியனுக்கும் நம் இந்தியா குடியரசு தின வாழ்த்துக்கள்


Comments
Post a Comment