நூல்கள் அறிமுகம்
1 புலிசாரை
2 பரத்தைத் தொழிலில் ஒரு படித்தப் பெண்
இந்த ஆண்டு வாசிப்பின் அண்டாக
இருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது காரணம் வாசிக்கப்படாத புத்தகங்கள் ஏராளமாக
தங்கி இருக்கிறது அத்தனையும் அற்புதமானவைகள் என்பதுதான் நெஞ்சுக்குள் சுழலும் இன்பம்,
இந்த முப்பது மணி நேரத்தில் ஒரு நாவலும் ஒரு நினைவு குறிப்பும் வாசித்தேன்..
முதலாவது நாவல் தமிழில் நேரடியாக எழுதப்பட்டது எழுத்தாளர் லட்சுமிஹர்.
இரண்டாவது நினைவுக் குறிப்பு வகையான..
சுதந்திரத்திற்கு முன்பாக எழுதப்பட்ட படைப்பு எழுதியவர் “மானதா தேவி” அப்படி
ஒருவர் இருந்தாரா அல்லது அது ஒரு கதாபாத்திரமா என்று உறுதியாக சொல்லப்படாத ஒரு
ஆசிரியரிடமிருந்து. இந்த இரண்டு நாவல்களையும் ஒருசேர பேச வேண்டிய எண்ணம் திடீரென
எனக்கு தோன்றியது.
அதற்கு காரணம் கால நெருக்கடி மட்டுமல்ல
ஒரே நிப்பரப்பில் இருவகையான மனநிலை சிந்தனா போக்கு கடவுள் பெயர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற
தொடர்பு நிலத்தில் எழுதப்பட்டது ஆனால் வெவ்வேறானது. நாவல் ஒரு நாட்டின்
தென்பகுதியில் இருந்து நினைவுக் குறிப்பு வட கிழக்கிலிருந்து....
முதலில் தம்பி லட்சுமிஹர் நாவலை பார்ப்போம்
மாடுபிடி மற்றும் ஜல்லிக்கட்டு களம்.. யதார்த்தவாழ்வு பண்ணெடுங்கால பண்பாட்டு நிலத்தின்
ஒரு சிறு பகுதி. அதனால் வாழ்க்கையை தொலைத்த மனிதர்கள்.. மாடுகளோடு வாழ்வதே ஒரு
வாழ்வாக கொண்ட ஒரு சமூகத்தின் மனிதனின் கூக்குரலாக புலிசாரை என்ற குறு நாவல்...
ஒரு மாபெரும் நாட்டின் தென்பகுதியில் நடக்கும் ஒரு இனக்குழுவுக்குள்ளான அல்லது ஒரு
சமூகத்துக்குள்ளான அல்லது பரந்துபட்ட சமூக வாழ்வில் வாழ்வியலின் ஒரு பங்காக
இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டு மாடு அதை பழக்குபவர் அல்லது அதை அடக்குபவர் அதை
அலங்கரிப்பவர் அதை ஒரு கனவாகவே கொண்டு அதனோடு வாழ்பவர் அதன் மீது ஆர்வம் கொண்டவர்
என்ற வகை வகையான கதாபாத்திரங்களை சித்தரிக்கிற பாசங்கற்ற ஒரு குறு நாவல்... புலிசாரையில்.
யாரும் ராமன் என்றோ கிருஷ்ணன் என்றோ பகவத் கீதை என்றோ ராமாயணம் என்றோ சீதை என்றோ
இலக்குவன் என்றோ புலம்பவில்லை அவர்கள் புலம்பியதெல்லாம் கருப்பசாமி மாயன் தவசி
காளை
....
“ஆமாமா அப்படியே ரெண்டு பொண்டாட்டி
கட்டி வாழறது எப்படின்னு சொல்லி தாங்க.” என்று ஒரு இளையவன் ஒரு முதியவனைப்
பார்த்து கேள்வி கேட்பது... பிறழ்
வாழ்வை ஒரு அவமானமாக கருதுகிற அல்லது பிறழ்வதை
அவ்வளவு அலங்காரமாக கருதாத ஒரு சமூக குரல்
புலிசாரை குறு நாவலில்
கேட்கிறது...
இளைஞர்கள் வாசிக்க வேண்டும்.
இதில் வரும்
குரல் “ஒரு நடிகையை அவன் தந்தை எதற்காக தன் மகளுக்கு சினிமாவில் நிறைய
வாய்ப்புகள் வேண்டும் என்று தேடி அலைகிறான்...”
“ரொம்ப கலங்காத ஒருநாள் இங்க உன் அப்பாவும் நீ யாரை மதிக்க விரும்புகிறாயோ அவர்களும்
உன் அறைக்கு வருவாங்க” (அதாவது பாலியல் தொழில் செய்யும் பெண்ணை தேடி)
பாலியல் தொழிலாளிகள் சுதந்திரப்
போராட்டத்தில் கலந்து கொள்வதை அவ்வளவாக வரவேற்காதவர்கள் தேசபக்தர்களுக்கு மத்தியில்
பாலியல் தொழிலாளிகள் சங்கம் அமைத்து தங்கள் நலனுக்காக போராடுவதை அவ்வளவாக
வரவேற்காத மகாத்மா காந்தியை பற்றி நம்மால் இந்த நூலில் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே நேரத்தில் தேசபக்தர் சித்தரஞ்சன் தாஸ் பற்றியும் இந்த இந்த புத்தகம் பேசுகிறது
இந்த சமூகம் எவ்வளவு குருடாக இருக்கிறது அதுவும் 1930
களுக்கு முன்பாக அல்லது அதே காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதை அப்பட்டமாக
பேசுகிற ஒரு நல்ல நூல் என்று என்னால் சொல்ல முடியும். இந்த நாட்டின் பண்பாட்டையும்
கலாச்சாரத்தையும் கண்மூடித்தனமாக விதந்தேந்தி கொண்டாடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்
என்பதை இப்படிப்பட்ட படைப்புகளின் வழியாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்..
நாடகம் பார்த்ததால் நாவல்கள்
படித்ததால் சரியான சவகாசம் இல்லாததால் இப்படி சீரழிந்து விட்டேன் என்று
புலம்புகிறாள்...
இப்படி இரு வேறு மனசைவுகளை
உண்டாக்குகிற இரண்டு நாவல்களை ஒரு கவிதை தொகுப்பை இந்த 30
மணி நேரத்தில் வாசித்த பரபரப்பில் இந்த பதிவை எழுதுகிறேன்...
காலச்சுவடு வெளியிட்டுள்ள இந்த நூல்
வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நூல்



Comments
Post a Comment