விஜய் பாய்ச்சலும்
கரூர் பின்னடைவும்
தமிழக வாக்காளர்கள் ஓரளவு அரசியல் புரிதல் உள்ளவர்கள் என்று நாம் நம்புவதற்கு பல
சாட்சியங்கள் பல காரணங்கள் பல காலங்களில் நடந்த தேர்தல்களின் விளைவுகள் அதன்
விளைவான தமிழகத்தின் இன்றைய வளர்ச்சி நமக்கு ஓரளவுக்கு நம்ப காரணமாக இருக்கின்றன
என்பது உண்மைதான், தமிழக வாக்காளர்கள் கொஞ்சம் தெளிவானவர்கள் என்று நம்புவதற்கான
அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் பல.. அந்த விதத்தில் நாம் மக்களின் மனோபாவத்தை ஒரு
குறுக்கு வெட்டு தோற்றமாக இந்த தேர்தல் காலத்துக்கு முன்பாக அல்லது தேர்தல்
வேலைகளுக்கு முன்பான தீவிர அரசியல் புயல்
வீசிக் கொண்டிருக்கிற காலத்தில் நடந்த கரூர் கோர சம்பவத்தை நாம் ஒரு விசாரணை செய்வது
போன்ற ஒரு பாவனையோடு அலசுகிற பொழுது...
அரசியலுக்கு புதிய வரவான விஜய் நமக்கு
ஒரு பெரிய சலனத்தை உண்டு பண்ணவில்லை ஒரு நடிகர் வருகிறார் அவர் பின்னால்
குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் இளைஞர்கள் வருவார்கள் என்பதும் நாம்
எதிர்பார்த்ததே, அது நடப்பதும் இயல்பு தான் காலம் காலமாக அதுதான் நடந்து
வந்திருக்கிறது. அப்படி கைபற்றப்பட்ட ஆட்சிகளில் என்ன நடந்தது என்ன ஆனது என்றும்
நமக்கு தெரியும். அதே நேரம் எம்ஜியார்
வந்தார் அவரை போல விஜய் வருகிறார் என்ற பார்வை மிக தட்டையானது. எம்ஜியார் அவர்கள் அண்ணா,
பெரியார், நீதிக்கட்சி காங்கிரஸ் ஆரம்கால வறுமை வெற்றி பிரபலம் என்ற பின்னணி எம்ஜியாருக்கு இருந்தது விஜய்க்கு?
விஜயும் படபிடிப்பிலிருந்து நேராக அரசியல் கலத்துக்கு வரவில்லை அவர் பல காலமாக
ரசிகர் மன்றம், நற்பணி மன்றம், அரசியல் கட்சி, மாநாடு, தேர்தல் பரப்புரை என்று
வளர்ந்து வந்தவர்தான்... என்ற நம் இயல்பான ஒரு பார்வையை மாற்றியிருக்கிறது இந்த
கரூர் துயரம். கரூரில் நடந்த சம்பவத்தை ஊடகங்கள் சொல்வதின் வழியாக தான் நாம்
தெரிந்து கொள்கிறோம். ஊடகங்கள் தான் அந்த செய்தியை அங்குலம் அங்குலமாக நமக்கு
காட்சிப்படுத்துகிறது. பலவிதமான காட்சிகளை பார்த்து நாம் சலித்து விட்டோம் உண்மையென்ன
என்று நாம் உணருமுன்னே ஊடகங்கள் பலவிதமான தீர்ப்புகளை நம் முன் வைக்கிறது. ஆனால்
ஒட்டு மொத்தமாக தமிழக மக்கள் அந்த சூழலை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்ற ஒரு
விசாரணை நமக்கு நாமே நடத்திக் கொண்டோமேயானால் ஒரு கட்சித் தலைவர் ஒரு கூட்டம்
நடத்துகிறார் என்றால் அங்கு நடக்கும் அசாதாரணமான சம்பவங்களுக்கு ஆளுங்கட்சியையும்
பொறுப்பேற்கச் சொல்வது என்பது ஒரு விதத்தில் நியாயம் என்றே வைத்துக் கொள்வோம்...
ஆனால் அந்தக் கூட்டத்தை நடந்த அரசியல் கட்சி தலைவர் அவரது கட்சி நிர்வாகிகள்
அனுமதி கேட்ட இடம், அரசு தந்த இடம், வருகிற பார்வையாளர்கள், ரசிகர்கள் அல்லது
அரசியல் தொண்டர்கள், அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை, கட்சிதலைவர் வருவது காலதாமதமானால்
ஏற்படும் சச்சரவுகள், இதை பற்றிய அடிப்படை அறிவோ திட்டமிடலோ இல்லாத நபர்கள் எப்படி
நிர்வாகிகளானார்கள்,? அந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த இரண்டாம் கட்ட தலைவர்கள்
எப்படி? இரண்டாம் கட்ட தலைவர்களானார்கள், இவர்களை தேர்ந்தெடுத்த தலைவர் எப்படி
தன்னை முதல்வர் போட்டிக்கானவர் என்று அறிவித்துக்கொள்கிறார்? என்ற கேள்விகளும்
நமக்கு எழுகிறது. முதல்வர் பதவி அவ்வளவு எளிமையானதா? அதற்கு சொகுசு வாழ்க்கையும்,
நடிப்பு பயிற்சியும், சினிமா பாணியில் கேள்விகள் கேட்கும் ஸ்டைலான பாவனையுடன் பல
லட்ச ரசிகர்கள் கொண்ட பிரபலமும் மட்டும் போதுமா? என்ற கேள்வி நமக்கெழுகிறது. தமிழகத்தின்
அரசியல் புரிதல், தமிழக வாக்காளர்கள் அவ்வளவு பலவீனமானவர்களா?
எண்ணிக்கையின் தீவிரம் குறித்து அங்குள்ள கொந்தளிப்பான நிலைமைகளை களத்திலிருக்கும் ஒருவர் மூலமோ அல்லது
அவருக்கு அடுத்த நிலைமையில் இருக்கும் ஒருவருக்கோ பேசி நிலைமையை உண்மைக்கு மிக
அருகில் போய் தெரிந்து கொள்கிற பக்குவம் கூட இல்லாத ஒரு அரசியல் தலைவர் முதல்வர்
கனவு காண்கிறார் என்பது தமிழக மக்களுக்கு தமிழக அரசியலுக்கு நியாயம் செய்யக்கூடிய
ஒன்றா? இது அடிப்படை தகுதிகளிலிருந்து ஒரு அரசியல் தலைவர் பிறழி நிற்கிறார் என்று
நாம் புரிந்து கொள்ள முடியாதா? புரிந்து கொள்ளக் கூடாதா? அல்லது ஏன் அப்படி நாம் புரிந்து கொள்ள கூடாது?
அதே நேரம் இதையெல்லாம் போலிஸ் கண்காணிக்க தவறிவிட்டதா, அல்லது அசட்டையாக
இருந்துவிட்டதா? அல்லது கண்டும் காணாமல் இருந்துவிட்டதா? என்ற கேள்விகளும் நமக்கு
எழுகிறது. அதே நேரம் காவல்துறை கட்டுபடுத்துமளவுக்கு கட்டுபாடான நிலையில்
அங்கிருந்த கூட்டம் மட்டுமல்ல நிர்வாகிகளும் இல்லை. ரசிகர்கள் மன
கொந்தளிப்பானவர்களாக இருப்பதையும் இறுக்கமாக சிக்கிக்கொண்டு தப்பியோடும்
மனநிலைக்கு ஆளாகுமளவு கூட்டம் இருக்கமாக இருப்பதையும் பதிவு காட்சிகளில் பார்க்கும்
போது நமக்கே மூச்சு திணறுகிறது. இந்த சுழலில் அங்கு அவ்வளவு பெரிய வண்டி வந்தது
நிலைமையை மிக மோசமாக்கிவிட்டது. அதை பற்றி விஜய் புரிந்துக்கொள்ளவே இல்லை
என்பதுதான் துயரம். பல முனைகளிலும் பொறுபற்ற செயல்கள் நடந்தேறி 41 உயிர்கள்
பலியாகிவிட்டது... மற்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் எத்தனை நபர்களோ நமக்கு
தெரியாது.
இந்த அரசியல் சூழலை எதிர்க்கட்சிகள்
எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை தமிழக மக்கள் கவனிக்காமலே விட்டு
விடுவார்களா? இந்த 41 பேர் சாவுக்கு சம்பந்தப்பட்ட
அரசியல் கட்சியும் அதன் முதல் காரண கர்த்தாவான விஜய் பொறுப்பேற்க மாட்டாரா?
முழுக்க முழுக்க அது ஆளும் கட்சியின் சதி என்று எதிர்க்கட்சிகள் இயல்பாக
சொல்வார்கள் குறிப்பாக எதிர்கட்சியான அண்ணா திமுகவுடன் வலுக்கட்டாயமாக கூட்டு
வைக்க விரும்பும் பாஜக அதை எந்தவிதமாக பயன்படுத்தும் என்பது சம்பவம் நடந்த இரண்டு
நாட்களிலையே ஹேம மாலினி தலைமையில் மத்திய எம்பிகளின் ஆய்வு குழு அமைத்த போதே
நமக்கு தெரிந்துவிட்டது.
இப்போது விஜயின் நிலைமை என்ன? 41 பேர் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா? அல்து
ஏன் இப்படி நடந்தது என்று தெரிந்துக்கொள்ள விரும்புகிறாரா? என்பதுடன் சிபிஐ விசாரணை
யாருக்கு சாதகமாக நடக்கும் அது என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பதை
எல்லாம் ஒரு பக்கம் யோசித்தாலும்.... அது நேர்மையாக நடக்குமா என்ற கேள்வி நமக்கு
எழுவது இயல்பு தானே.. அந்த கேள்வியின் விடையாக விஜய்க்கு சாதகமாகவும்,
ஆளுங்கட்சிக்கு எதிராகவும் விசாரணைக்குழு தனது தீர்ப்பை வைக்கிறது என்று வைத்துக்
கொண்டால் ஒருவேளை தமிழ் சமூகம் அதை அப்படியே ஏற்றுக் கொண்டால் அதை பயன்படுத்தி
விஜய் மற்றும் அதிமுக கட்சிகளை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்கான தந்திரங்களை
கட்டமைத்து வைத்திருக்கிற பாஜக பற்றி மக்கள் புரிந்துக்கொள்ளாமலே இருந்துவிடுவார்களா?.
கரூரில் நடந்த 41 பேர் மரணத்தை சுற்றி நடக்கும் இந்த தொடர் செயல்களை மக்கள்
சிந்திக்காமல் தனிப்பட்ட விசாரணை எதுவும் இன்றி அப்படியே ஏற்றுக்கொண்டு ஆளுங்கட்சி
தான் குற்றவாளி என்று ஒரு மனதாக நம்பி விடுவார்களா? அல்லது
எல்லோரிடத்திலும் தவறுகள் இருக்கிறது அதில் யாருக்கு எவ்வளவு பங்கு என்ற
தீர்மானத்துக்கு வருவார்களா?.. என்ற கேள்விகள் எல்லாம் நமக்கு
இயல்பாகவே எழுகிறது.
பாஜக, அதிமுக என்கிற இந்த இரண்டு
கட்சிகளுக்கும் இது ஒரு அரிய வாய்ப்பு என்று அவர்கள் தலைவர்களே ஒவ்வொரு மேடையில்
மேடையிலும் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள் இப்படியான ஒரு வாய்ப்பை விஜய் தனது
கொள்கை எதிரிகளுக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறார் என்று ஒரு சிலரும்... இந்த
வாய்ப்பை பாஜக பயன்படுத்தி சதுரங்க விளையாட்டு விளையாடுகிறது என்று ஒரு சாராரும்
கருதியினாலும் பொதுவில் இது எந்த விதமான லாபகரமான பயனையும் எதிர்க்கட்சிகளுக்கு
தருவதற்கான எந்த சந்தர்ப்பமே கிடையாது.
இது அத்தனையையும் நாம் சீர்தூக்கி பார்க்கும் போது திமுக அரசும் இந்த
விடயத்தில் மிக நீக்குப் போக்காகவே இந்த சூழலை கையாண்டு இருக்கிறது அதே நேரம் ஒரு
பக்க குற்றச்சாட்டு என்பது இந்த நிகழ்வில் சாத்தியமே கிடையாது ஏனெனில் விஜய்
ரசிகர்கள் மட்டுமல்ல விஜய் ஆதரவாளர்கள் அவரது கட்சி நிர்வாகிகள் ஏன் விஜயை கூட
சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவர்களாக நாம் இதுவரை பார்க்கவில்லை இந்த கட்டுப்பாடு
அற்ற அல்லது பொறுப்பற்ற அல்லது வரக்கூடிய விளைவுகளை சிந்தித்துப் பார்க்கும்
கற்பனை சக்தி இல்லாத ஒரு பெரும் கூட்டம் இப்படியான சிக்கலுக்குள் சிக்கிக் கொள்வதை
நாம் அந்த வீடியோக்களை முழுக்க ஆராய்ந்து பார்த்தபோது நம்மால் புரிந்து கொள்ள
முடிகிறது.... ஏழு மணி நேரம் காலதாமதமாக ஒரு கட்சித் தலைவர் ஒரு சினிமா நடிகர்
என்ற பிம்பத்தில் இருந்து அரசியல் கட்சி துவங்கியவர் என்ற பார்வையோடு இதை நாம்
அணுகும் போது அதனுடைய உண்மை தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியும் ஏழு மணி
நேரம் அவருக்காக காத்திருப்பவர்கள் சவகாசமாக போய் தண்ணீர் குடிக்கவோ, உணவு
அருந்தவோ, இயற்கை உபாதைகளை கழிக்கவோ எந்தவிதமான சந்தர்ப்பமும் இல்லை ஏனெனில் எந்த
நொடியிலும் அவர் வந்துவிட கூடும் அவரை பார்ப்பதை நாம் தவிர்த்து விடக்கூடாது
என்கிற மன உளைச்சலில் அவர்கள் இருந்திருப்பார்கள் 7 மணி நேரத்திற்கு கூட்டம்
கூடிக் கொண்டே கூட்ட நெரிசல் மிகப்பெரிய அழுத்தத்தை உண்டு செய்திருக்கும் இந்த
நிலைமைகளை எல்லாம் அவர்கள் கடந்து சளிப்படைந்து களைப்படைந்து... இருக்கும் சூழலில்
அவர் காலதாமதமாக வருகிறார் வந்தவுடன் அவர் முதலில் சொன்னதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த இடத்திற்கு நான் வந்து சேர்வதற்கு உதவிய காவல்துறையினருக்கு என் மனமார்ந்த
நன்றி அவர்கள் இல்லாமல் நான் இந்த கூட்டத்தை கடந்து இவ்வளவு தூரம் வந்திருக்க
முடியாது என்று சொல்லுகிறார் மேலும் கூட்டம் இருக்கமடைகிறது. இந்த சூழலில் ஒருவர்
அசைந்தால் கூட பத்தாவது ஆக இருக்கிற மனிதன் அசைவான். என்கிற அறிவியல் விதிப்படி
ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக நிற்கிற இடத்தில் நிகழ்த்தப்படுகிற ஒரு சின்ன
சலசலப்பு கூட எவ்வளவு பெரிய அழுத்தத்தை விளைவுகளை உண்டாக்கும் என்பதை மிக
சாதாரணமான அக்கறையுள்ள ஒரு அரசியல் தலைவரால் கணிக்க முடியும்... எண்பதுகளில், தொண்ணூறுகளில்
நாம் அதுபோன்ற கூட்டங்களை பார்த்திருக்கிறோம்... ஆனால் கட்டு மீறிய கூட்டம்
என்பதெல்லாம் எப்போதும் கிடையாது மக்கள் காவலர்கள் வழிநடத்தும் போது கொஞ்சம் எல்லை
மீறுவார்கள் மற்றபடி கட்டமைக்கப்பட்ட வழிகளில் மட்டுமே மக்கள் நெருக்கி
அடிப்பார்கள்... ஆனால் விஜயின் தொண்டர்கள் அல்லது அந்த ரசிகர்கள் யாரும் யாரையும்
மதிப்பதாகவே இல்லை பெரும்பாலும் கூச்சலிடுவதாகவும் வேலிகளை பிரித்தெறிந்து தன் கதாநாகனை
தொடவேண்டுமென்கிற சாகச மன நிலையிலிருப்பவர்கள், அவர்கள் நெருக்கமான சூழலில் என்ன
செய்வது என்று தெரியாமல் தப்ப முடிந்தவர்கள் தப்புகிறார்கள்.... மற்றவர்கள் கதி
பற்றி அங்கு யாரும் யோசிப்பதாக தெரியவில்லை சில இடங்களில் நெரிசலற்ற பகுதியில்
மயங்கி விழுகிறார்கள் அவர்களுக்கு தண்ணீர் தருவது போன்ற வேலைகள் நடக்கிறது
இதெல்லாம் விஜய் கண்ணெதிரிலே நடக்கிறது ஒரு கட்டத்துக்கு மேல் அங்கு கூட்டம்
நெரிசல் அதிகமாகிறது இதையெல்லாம் யாராவது திட்டமிட்டு ஒருவர் நிகழ்த்த முடியுமா?
ஏற்கனவே இருக்கிற கூட்டம் தான் அந்த அழுத்தத்தையும் நெரிசலையும்
உருவாக்க முடியுமே தவிர ஒரு செருப்பு வீசியதால் பரபரப்பு உண்டாகிவிட்டது என்று
சொல்வதெல்லாம் நகைச்சுவையான தமிழக மக்களை முட்டாள் ஆக்குகிற ஒரு திசை
திருப்பல்....
விஜயின் நிர்வாகிகள் விஜய் மற்றும்
அவரது தொண்டர்கள் அந்த பகுதியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பொறுப்பாளர் இவர்களின்
குற்றத்துக்கான அளவின் ஒரு பெரும் பகுதியை எடுத்துக்கொள்கிறது... அதே நேரம் நாம்
அரசிடம் கேள்வி கேட்க முடியும் ஏன்? இப்படியான குறுகலான இடங்களில் அனுமதி
தந்தீர்கள் என்று ஆனால் மீண்டும் அவர்கள் சொல்லுவார்கள் இதைவிட குறுகலான இடத்தை
அவர்கள் கேட்டார்கள் என்று... இதில் முதல் தவறு யாரிடம் இருக்கிறது இரண்டாவது தவறு யாரிடம்
இருக்கிறது இந்த தவறுகளை எல்லாம் யார் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய
பார்க்கிறார்கள் என்ற கேள்விகள் மட்டுமே இப்போது நம்முன் தொங்கி நிற்கிறது...
இதில் பாஜக ஒரு பெரிய அரசியல் வேட்டை
நடத்துவதற்கான காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது... அதற்கு கரூர் சம்பவம் ஒரு
பெரிய தீனி. ஆனால் அதுதான் அவர்களை முழுமையாக அப்பட்டமாக தமிழக மக்களுக்கு
அடையாளம் காட்டுவதற்கான சம்பவமாகவும் மாறும் வாய்ப்பு இருக்கிறது... இப்போது விஜய்
பாஜகவின் பிடியில் இருப்பது வெளிப்படையாக தெரிய வரும்போது தமிழக மக்கள் மொத்த
அரசியல் போக்கின் மீதும் ஒரு தனித்த கவனத்தை பெற்று விடுவார்கள். அந்த கவனம் இந்த
தேர்தலில் மிகப்பெரிய சாதக பாதகங்களை உருவாக்கும்... எது எப்படி இருப்பினும் இந்த
கரூர் சம்பவம் திமுகவுக்கு ஒரு பெருத்த பாதிப்பாக இருப்பதற்கான எந்த வாய்ப்பும்
இருப்பதாகவே நமக்கு தெரியவில்லை அரசியல் பகடைகள் ஏன் உருட்டப்படுகிறது என்பது
சிபிஐ விசாரணைக்கு முன்பாகவே அதன் தீர்ப்புக்கு முன்பாகவே தமிழக மக்கள் உணர
தொடங்கி விட்டார்கள் என்பதுதான் நம் விசாரணையின் முடிவு... பலமாக வந்த விஜய் இப்போது
பலவீனமான இடத்துக்கு தள்ளியுள்ளது கரூர்.
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் சாகசங்களை சொல்லி ஓட்டு கேட்டதில்லை
இதுவரையில் அவர்கள் திமுகவை வீழ்த்துவோம் என்று மட்டுமே கொதிக்கிறார்களே தவிர...
தமிழகத்தின் நிலைமை இன்றைய அரசின் மீது தமிழர்களுக்கு தமிழக மக்களுக்கு இருக்கும்
ஆதரவு போக்கு அரசின் சாதனைகள் இது எல்லாமே மாநில அரசுக்கு ஒரு பெரிய பக்கபலமாக
நிற்கும் கடைநிலை ஊழியர்கள் மேல் அவர்கள் காட்டும் அக்கறையின்மை குறித்த முணுமுணுப்புகள்
இருக்கிறது என்றாலும் எதிர்க்கட்சிகள் கரூர் விடயத்தை திமுகவுக்கு எதிராக நிறுத்த
முடியாது. அப்படியே நிறுத்தினாலும் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவும் இருக்காது
இதன் ஒரே பாதிப்பு விஜய்க்கு தான் ஏனெனில் தனது கொள்கை எதிரிகளிடம் அவர்
மண்டியிட்டு விட்டார் என்ற பேச்சு இப்போதே முணுமுணுப்புகளாக எழுகிறது உண்மையில்
கொள்கை எதிரிகளிடம் அவர் சமரசம் செய்து கொண்டு அவர்களது கூட்டணியில் இடம் பெறுவார்
என்றால் விஜய்யின் சகாப்தம் சரிந்து விழுகிற சத்தத்தை மட்டுமே நம்மால் கேட்க
முடியும். இந்த சத்தத்தில் எதிர்க்கட்சிகளின் லாபம் என்ன என்று பார்த்தால் அவை
முன்பு இருந்த இடத்தை விடவும் நட்டத்தை நோக்கி பின்னகர்ந்து விட்டது என்பதை
நம்மால் புரிந்து கொள்ள முடியும்....
தமிழக அரசு இந்த விடயத்தில் மிக
நிதானமாக செயல்படுகிறது என்பதே பார்வையாளரான நமக்கு மிக எரிச்சல் ஊட்டுகிற விடயமாக
இருந்தது. ஆனால் அதுவே மாநில அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாகவும் மாறும் ஏனெனில்
ஏன் இவர்கள் விஜயை சட்டரீதியாக அணுகாமல் இருக்கிறார்கள் ஏன் அவர்கள் நிர்வாகியை
இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள் ஜெயலலிதாவாக இருந்திருந்தால் ஒவ்வொருவரையும்
பிடித்து அந்த அம்மா சிறையில் அடைத்திருப்பார் இன்றைய முதல்வர் பொறுமை காக்கிறார்
என்ற மக்களின் கேள்விகள் எல்லாம்... யாருக்கு லாபம் யாருக்கு நட்டம் என்று
கேள்விக்கு பதில் என்ன?
இப்போது உயிர்களை பறிகொடுத்த குடும்பங்களை தன் மாளிகைக்கு அழைத்து மன்னிப்பு கேட்டதுடன்
ஆறுதலும், நிவாரணமும் வழங்கிய விஜயை மக்கள் எப்படி புரிந்துக்கொள்வார்கள் என்பதே நம்
கேள்வி
விசாரணை தொடரும்...

Comments
Post a Comment