பன்மகத் தன்மையுள்ள பண்பாடு கலாச்சாரத்தை
ஒற்றைக் கலாசாரமாக்கும் வரலாற்று திரிபு பாசிசம்.
30-8-2025
கரன் கார்க்கி
இந்துக்கள் எல்லாம் சனாதனியும் அல்ல சனாதனிகள் எல்லாம் இந்துக்களும் அல்ல இவர்கள் திட்டமிட்டு போட்டு குழப்புகிறார்கள்...இந்து என்ற சொல் இவர்களது மதவாத அணி திரட்டலுக்கான ஒரு யுக்தி
அடிப்படையில் சிந்து நதிக்கு அப்பால் உள்ளவர்களை சிந்துக்கள் என்று மேற்குலகினர் அழைக்கும் வழக்கமிருந்தது அதுவே சிந்துஸ் என்ற சொல் இந்துஸ் என்று மாறி இந்தியா என்ற சொல்லாகி நிலைக்க காரணமானது உலகமே இந்தியாவை அப்படிதான் அழைத்தது. அமெரிக்காவில் வாழ்பவர்கள் அமெரிக்கர்கள் இந்தியாவில் வாழ்பவர்கள் இந்துக்கள் என்பது போல இதில் வேத சனாதனி என்பவனும் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டானது.. அதனடிப்படையில்தான் பெரும்பாலான இந்தியர்களும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் இந்து என்று சொல்வதின் பொருள் என்ன?ஒரு மதம் அவர்களை மிக மோசமாக நடத்தும் போது அவர்களை சுரண்டுவதற்காகவே அந்த மதம் இருக்கும் பொழுது அவர்கள் மாற்று மதங்களுக்கு மாறுகிறார்கள் அப்படி தான் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பௌத்தர்கள், சைணர்கள் என்று பல மதங்கள் இந்தியாவில் செழித்து இருக்கிறது. பவுத்தம், சைவம், வைணவம், சீக்கியம், இஸ்லாம், கிருத்துவம், யூதம், பார்சி, அய்யாவழி என்றோரு பிரிவும் உண்டு, இதையெல்லாவற்றையும் கலக்கி இந்து மதம் என்று பொத்தாம்மொதுவாக சொல்ல முடியுமா நாத்திகர்களும் பெருந்தொகுதியினர் உண்டு, சாருவாகா தத்துவமே நாத்திக தத்துவம்தான்... அதை தாண்டி இந்தியாவெங்கும் பல கோடி குலதெய்வ வழிபாடுகளும் உண்டு அதற்கும் வேத கடவுள்களுக்கும் தொடர்பில்லை.... ஏன் சவைத்துக்கும் வைணவத்துக்கும் என்ன தொடர்பு? ஆனால் பெரும்பாலான மக்களின் மேல் வேத கடவுளுக்கான வழிபாட்டு பண்புகளை திணிப்பது நியாயமா? என்று மக்கள்தான் யோசிக்க வேண்டும் .
அதன் அடிப்படையில் இந்துக்கள் என்பவர்கள் பலவிதமானவர்கள் அவர்கள் சிலருக்கு ராமனையே கதைகளின் வழியாகவும் கூத்துகளின் வழியாகவும் பாடல்களின் வழியாகவும் தெரிந்து கொண்டது தான். அவர் வாழ்க்கை முறைக்கும் ராமனுக்கும்என்ன? தொடர்பு பிறகு அதை போல செய்தல் பண்பின் வழியாக பின் பற்ற தொடங்கி அதனால் நாசமானவர்கள்... தங்கள் சொந்த தத்துவங்களை தொலைத்தவர்க்கள். ராவணனை ராம்பக்தர்கள் கொளுத்தி கொண்டாடும் போது இவர்களும் கை தட்டுகிற பண்பாட்டு பிழை அது புரிதலுக்குள்ளாகும் போது, சாதியால் ஒடுக்கபடுவதை தாங்க முடியாத போது மாற்று வழிகள் அரவணைத்தால் அதை நோக்கி நகருகிறார்கள். அதனால் தான் குறுகிய காலத்தில் அதிக மத மாற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்தது.
கதைகளை நம்புகிற மக்கள் அந்த கதைகளையும் உண்மை என்று நம்பினார்கள். அந்த கதையாடல்களில் இருக்கும் வரலாற்று புனைவுகளை வரலாற்றின் மீது கட்டமைக்கப்பட்ட பெரும்பாலான புனைவுகளை அது தங்கள் மேல் சுமத்தும் இழிவுகளை அவர்கள் புரிந்து கொள்வதற்கு எந்த சாத்தியமும் இல்லாமல் போனது. அப்படியே புரிந்துக்கொண்டாலும் ஆயுதம் தாங்கிய இடை சாதிகள் அதாவது சூத்திரர்களின் கொடுங்கோல் பண்பால் பாதிக்கப்பட்டவர்களால் புலம்பக்கூட முடியாது . தமிழ் சித்தர்கள் அது குறித்து அப்பட்டமாக கொதித்து பேசியதை பெரும்பாலான மக்கள் பொருட்படுத்தவில்லை... ஒரு வேளை அதை பொருட்படுத்தமுடியாத நிலையில் இருந்தனர். இந்த அழுத்தங்களில் இருந்து விடுதலை தந்து ஆற்றுபடுத்தியது அவரவர் குலதெய்வ வழிபாட்டு முறைமைதான்.. அது மது அசைவ உணவு படையல்களாலானது. வர்ண பாகுபாட்டின் கடைசி படியில் இருந்தவர்களுக்கே இந்த கதிதான் அப்படியென்றால் வர்ணத்தை ஏற்காதவர்களின் கதி என்ன?
இந்தியாவெங்கும் நம்பிக்கைகள் இந்த புழுக்கத்துக்குள்தான் வளர தொடங்கியது ஆனால் அதற்குப் பின்னிருந்த சனாதனிகளின் அதிகாரம், அரசர்கள் அவர்களுக்கு தந்த ஆதிக்க நிலை, சதுர் வர்ணம், வேதம் இவைகள் எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர்கள் தான் இதற்கு முதலாளிகள் போல ஆகி விட்டார்கள். கருவறை அவர்களுக்கான சிறப்புரிமையாகிவிட்டது. அவர்கள் கைபர் போலன் வழியாக கொண்டு வந்தவைகளில் முக்கியமான அவர்களது பண்படாத எழுத்து வடிவற்ற சமஸ்கிருத மொழி அதை அவர்கள் தேவ பாஷை என்றே அழைத்தனர் அதையே உச்சாடனங்கள், வேத மந்திரங்களில் , அர்சனைகளில் சடங்குகளில் பயன்படுத்தினர்... அதே நேரம் கோயில்கள் எழுவதற்கான உழைப்பு, கருவறையில் இருக்கும் சிலை உட்பட அதை உருவாக்குவதற்கான செல்வம் அத்தனையும் மக்களுடையது? ஆனால் உரிமை மட்டும் அவர்களுடையது. இந்த அய்யோக்கிய தனமான போக்குக்கு எதிராக சித்தர்கள் போன்ற அறிவு வர்கத்தினரை தவிர வேறு யாரும் வாய் திறக்கவில்லை... காரணம் பயம் ... அரசனுக்கு வேத புரோகிதர்களும், புரோகிதர்களுக்கு அரசனும் என்கிற பல விதமான இணக்கமான கூட்டு பஜனைகள் நடந்தபடி இருக்க வெளியிலிருந்த வந்தவர்கள் புகுத்திய நால் வர்ணத்தை ஏற்ற ( பண்பற்று தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற போக்கு சிலருக்கு ஆதயமாக இருக்க) படிநிலை சமூகம் தனக்கானதை பெற்று அனுபவிக்கும் நிலையிலேயே இருந்தது. இதில் இந்த கேடான பண்பாட்டு சீரழிவை மறுத்த மக்களை வேத புரோகிதர்களுடன் அவர்களை ஏற்று லாபமடைந்த மக்களும் சேர்த்து சீரழித்தனர் அவர்களை ஊருக்கு வெளியே துரத்தி உழைக்கும் விலங்காக்கினர்... சாதியமைப்பை ஏற்க மறுத்தவர்களை சூரையாடி ஒன்றுமில்லாமலாக்கிவிட்டனர் சாதியற்றவர்களை கீழ்சாதியென்றனர், ''பார்பானுக்கு மூப்பு பறையன் கேட்பார் இல்லாமல் கீழ் சாதியானான்''. சொலவடை.
ஏற்கனவே இருந்த தொல்குடிகள் அதன் அவர்களை ஆண்டவர்கள் ஏன் புய கதாகாலட்சேபங்களுக்கு தலையாட்டி மயங்கினார்கள் ஏன் தங்கள் சொந்த தத்துவங்களை தொலைத்து புதிய ஒன்றை ஏன் ஏற்றார்கள் என்ற கேள்விக்கு (உள்ளூர் சர்கா்களை விட வெளியூர் சர்கஸுக்கே மதிப்பு அதிகம் இப்போதும் நாம் வெள்ளையனுக்கு தரும் மதிப்பை உள்ளூர் மனிதனுக்கு தர மாட்டோம்... இப்போதும் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு மதிப்பில்லை... புரிதலுக்காக)
வேத நாகரீகத்தினரின் தோற்றம், நிறம், அவர்களது பெண்களின் தோற்றம் நிறம் எல்லாமே வரலாற்று பூர்வமாக இதற்கு பின்னணியாக இசைத்துக்கொண்டிருந்தது. அந்த இசையில் மயங்கிய மன்னர்கள் ஜமீன்கள், குறுநில மன்னர்கள் எல்லோருமே அவர்களுக்கு வேதங்களை கற்றுத் தருபவர்களுக்கு வேதக் கதைகளை சொல்பவர்களுக்கு.. முன்னுரிமை தந்ததன் பின்னணியில் இருந்தது அந்த இசை மகிமை தான்... இப்போதும் கூட நிகழ்த்து கலையில் சினிமா நாடகம் எல்லாத்துறையிலும் அந்த இசை பின்னணியில் இயங்கிக் கொண்டே இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும் இசை என்பது ஒரு மயக்கம் மயக்கமூட்டும் மகிழ்விக்கும் ஒரு குறியீட்டு சொல்.
வேதத்துக்குரியவர்கள் அந்த வேதத்தின் மொழியான சமஸ்கிருதத்துக்குரியவர்கள் ஐந்து வர்ணத்தை புருஷா மூலம் இந்த மண்ணில் கதையாடலாக கதைகளாக மக்கள் மனதில் பதிய வைத்து அதையே ஒரு பண்பாட்டு கூறாக ஆக்கி மக்களை பிளவு படுத்தி சொந்த சகோதரர்களையே ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தி நாசம் விளைவித்த அவர்களை பற்றி வழிநடக்க வரலாற்று சம்பவங்கள் இருக்கிறது. நம் மக்களோ வரலாற்றில் புலிகள் பிறகென்ன எதிரிக்கு கொண்டாட்டம்தான்.
இவர்களை எல்லாம் எதிர்த்து தான் பேராசான் புத்தன் என்கிற மகத்தான பகுத்தறிவு ஒளி தோன்றியது. பேராசான் புத்தன் முதலாக இவர்களுக்கு எதிரான கேள்விகளை எழுப்பி, இவர்கள் வேதங்களில் உள்ள பூச்சாண்டி தனங்களை எதிர் குரலால் ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி ஒரு தத்துவத்தை நிலை நிறுத்தி அந்த தத்துவத்தின் ஆணிவேர் அன்பு என்று கூறி அதன் பின்னால் பெரும் மக்களை அணி திரட்டினார், ஆனால் அவரையே அவதாரங்களில் ஒன்றாக கதை அளக்கும் அளவுக்கு வேத புளுகு பண்டிதர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது அப்படி வாய்ப்பளித்தவர்கள் யார் என்றால் மன்னர்கள் அதனால் தான் இவர்கள் சோழர்களை கொண்டாடுகிறார்கள், குப்தர்களை இவர்கள் தலை மேல் வைத்து கொண்டாடி குப்தர்களின் காலம் பொற்காலம் என்று புளுகுவார்கள். அவன் சொல்வதுதானே வரலாறு.
வரலாற்றில் நம் மக்களின் அறிவு எந்தளவுக்கு என்றால் அந்தளவுக்கு ... 1910ம் ஆண்டுக்கு முன்பாக தமிழர் எவருக்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியது ராஜ ராஜன் தான் என்று தெரியாது. கரிகாலன் கட்டினான் என்று நம்பியவர் உண்டு, நாயக்க மன்னர்கள் கட்டியதாக கதையுண்டு, பூதங்கள் கட்டியதாகவும், காடுவெட்டி சோழனொருவன் கட்டியதாகவும் நம்பிய மக்களுண்டு. ஆனால் அதை தமிழருக்கு உலகுக்கு கண்டுபிடித்து சொன்னது ஒரு ஐரோப்பியர் ஹூல்ஸ் EUGEN JULIUS THEODOR HULTZSCH .
அதன் பிறகு இவர்கள் என் பாட்டன் கட்டினான் என் பட்டன்தான் சோழன் என்றெல்லாம் மார்தட்டி வரலாற்று சிரிப்பூடுகிறார்கள். உன் பாட்டனையே ஒரு வெள்ளையன்தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டியிருக்கிறதே என்று யாருக்கும் உரைக்கவில்லை. தமிழர் நிலை மட்டுமல்ல ஓட்டு மொத்த இந்தியாவின் நிலையும் அதுதான் காரணம் இந்திய வரலாற்றை பொய்யாக எழுத துடித்தவர்களின் சதி அதற்க்கு பின்னே இருக்கிறது. நாங்கள்தான் வரலாறு என்று சொல்ல அவர்கள் விரும்புகிறார்கள் என்பதுகூட நமக்கு இன்னும் புரியவில்லை என்பதுதான் துயரம். உலகமே அங்கிகரித்த சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம், திராவிட நாகரீகம் என்று ஏற்க மறுப்பவர்கள். கீழடி நாகரீகத்தை தமிழர் நாகரீகம் என்று ஏற்க மறுப்பவர்கள் யார்? எதற்க்கு என்பது கூட நம்மவர்க்கு புரியவில்லை என்பதுதான் சோகம்.
அசோக மன்னன் என்ற ஒரு மன்னன் மண்ணில் வாழ்ந்தான் என்ற வரலாறும் 150 ஆண்டுகளுக்கு முன் இந்த இந்திய நிலமெங்கும் உள்ள மக்களுக்கும், அறிஞர்களுக்கும் தெரியவே தெரியாது அதற்கும் ஒரு வெள்ளையர்களே வர வேண்டி இருந்தது. ஜேம்ஸ் பிரின்செப் அசோகரின் கல்வெட்டூகளை படித்து அசோகரின் வரலாற்றை வெளி கொணர்ந்தார் என்பது வரலாறு.
பீகார் ஒரு காலத்தில் கல்வியில் செழித்த நிலமாக இருந்தது. அங்கு தான் உலக புகழ் பெற்ற நாளந்தா பல்கலை கழகம் செயல்பட்டு வந்தது. பின் இன்றைய சூழலில் அது பின் தங்கிய மாநிலமானது ஏன் பீகார் மக்கள் பிழைப்பு தேடி வெளி மாநிலங்களுக்குப் போகிறார்கள். இந்த நிலைக்கு அது ஆளக காரணம் நாம் அறிந்துக்கொள்ள வேண்டாமா? இதற்கு தனி கட்டுரை எழுத வேண்டும் .... ( புரிதலுக்காக)
மன்னர்களோடு நெருங்கி இருந்தவர்கள் அவர்களுக்்குஉ ஆலோசனை தந்தவர்கள், அவர்கள் சுகமாக வாழ அனைத்தையும் தருவித்து தந்தர்கள். தங்களை வரலாற்றில் முதன்மையாக காட்ட சக்தியோடு வரலாற்றை திரிபு செய்து வரலாற்றை மூடி மறைத்து தங்கள் புனை கதைகளின் வழியாக இந்த மண்ணை இந்த மண்ணின் மக்களை போலியான கற்பனை சாதியால் தரம் பிரித்து தங்களுக்கு ஏதுவாக வழி நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது ஐரோப்பியர்களின் வருகை ஏற்கனவே முகலாயர்கள் அந்த வேலையை கொஞ்சம் செய்தார்கள். அவர்களின் வருகைக்குப் பிறகு பெரும்பான்மை மக்கள் வாழ்வில் மாற்றங்கள் நிழ தொடங்கின, இன்றும் முகலாயர்கள் மீது இஸ்லாமியர்கள் மீது இவர்களுக்கு பொறாமையும், பொச்சரிப்பும் கடும் கோபமும் இருப்பது அதனால்தான். ஆனால் வெள்ளையர்கள் இவர்களை பெரும்பாலும் அனுசரித்து உயர் பதவிகளை இவர்களுக்கு வழங்கினார்கள் ஏனெனில் வெள்ளையர்களுக்கு ஆள் பற்றாக்குறை. அதனால் இங்குள்ளவர்களுக்கே பயிற்சி கொடுத்து உயர் பதவிகளில் அமர்த்தி இந்த முழு நாட்டையும் 300 ஆண்டுகளுக்கு ஆண்டார்கள் அப்போது வெள்ளையர்களுக்கு துரையே என்று சலாம் போடாத ஒரு சனாதனியும் கிடையாது. பரங்கியென்றும், மிலேச்சனென்றும் சொல்லபட்டவனின் மொழியை தங்கள் வீடுகளிலே பேசுமளவு விதந்தேந்தினார்கள் இன்னும் பல அதை வரலாறு நமக்கு சொல்லும்.
இன்று இவர்கள் புதிதாக இந்துக்கள் சைவம் சாப்பிடுவதில்லை என்று சொல்வதெல்லாம் ஒரு ஏமாற்று பஜனை பாடுகிறார்கள். இந்தியர்கள் எப்போதும் ஆதியில் இருந்து இன்று வரை அசைவ உணவை உட்கொள்ளுகிறவர்கள் தான். சாதனத்தை முழுமூச்சாக கொண்ட வேத சமஸ்கிருத பற்றாளர்கள் மட்டுமே இறைச்சியை சாப்பிட மாட்டார்கள் அதுவும் புத்தனுக்கு பிறகு நடந்த மாற்றமது என்பது வரலாறு. அதற்க்கு முன் அவர்கள் தீர்த்து கட்டாத உயிரினங்களே கிடையாது வில்லும் அம்பும் சுமந்து அவர்கள் கடவுள் திரிவது எதிரிகளை வேட்டையாடுவதற்கு மட்டுமல்ல உணவுக்கு வேட்டையாடுவதற்கும் தான் நீங்கள் வால்மீகி ராமாயணத்தை வாசித்தால் அவர்களது மாமிச உணவு பழக்க பட்டியல்கள் இருக்கிறது அதில் முழுமையான வரலாறுகள் அப்படியே இருக்கிறது அதை யாரும் இவர்கள் மாற்றி விட முடியாது. ஒரு முனிவர் தருகிற உணவில் பசுவின் கறி இல்லாமல் போனால் அது முழுமையான விருந்தாக இருக்காது என்பது அவர்களது வேத கூற்று... புதிதாக மக்களை தங்கள் பட்டியில் அடைப்பதற்காக இந்துக்கள் சைவம் உண்பதில் இல்லை என்று சொல்வதெல்லாம் பன்னெடுங்காலமாக அசைவ உணவை பண்பாட்டாக கொண்ட மக்களை திசை திருப்புதல் செயல். வரலாற்றுக்கு எதிரான செயல் சமூகத்துக்கு எதிரான செயல் இதை 85% மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்துக்கள் என்பவர்கள் யார்? சைவர்களும், வைணவர்களும் இந்துக்கள் என்று இவர்கள் சொல்லுவார்கள் பௌத்தர்களையும் இவர்கள் இந்துக்கள் என்று சொல்லுகிறார்கள் இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் மற்றும் அத்தனை பேரும் இந்தியாவில் உள்ள அத்தனை பேரும் இந்துக்கள் என்று சொல்கிறார்கள் அது உண்மைதான் ஆனால் அவரவர் பண்பாடு வேறு வேறு இந்துக்களில் சைவர்கள், வைணவர்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், நாத்திகர்கள் இன்னும் ஏராளமான பிரிவுகள் உள்ளது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான உணவு முறை ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சிகை அலங்காரம், ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்று வெவ்வேறாக இருக்கிற இந்த மண்ணில் இந்து என்று பத்தாம் பொதுவாக ஒரே வார்த்தையில் அடக்க முயல்வது ஒரு பாசிச சிந்தனை இதை அடிப்படையில் புரிந்து கொள்ளாத எந்த இந்தியனும் உண்மையான விடுதலை பெற்றவனாக கருதவே முடியாது ஏனெனில் வரலாற்று புரிதல் இல்லாமல் போனால் இந்த வேத பண்பாட்டுக்காரர்களால்
அவர்களது வெளுத்த பண்பாட்டில் மூழ்கடித்து விழுங்கி விடுகிற செயலில் இருந்து தப்பவே முடியாது.
அறிவார்ந்த புரட்சிகர இளைஞர்களின் பார்வைக்கு.


Comments
Post a Comment