எமர்ஜ
ன்சியை விட மிக ஆபத்தானது மோடியின் ஆட்சி



எமர்ஜென்சி நினைவு தினத்தை துக்க தினமாக கொண்டாடுகிற அளவுக்கு யோக்கியர்களா பிஜேபி கட்சியினரும்

மோடி அரசும்...

இந்தியாவின் இவர்கள் மூன்றாவது முறையாக ஆளுகிறார்கள் இவர்கள் ஆட்சியில் செய்தது அத்தனையும் கேடுதான் ஒரே ஒரு நல்ல விடயம் என்பது நம் பார்வைக்கு ஒன்றுமே தென்படவில்லை இவர்கள் அப்படி ஏதாவது செய்திருந்தால் அத்தனையும் முதலாளித்து வளர்ச்சிக்காக முதலாளிகளுக்காக செய்ததுதான்... அடிப்படையில் அவர்கள் நலனுக்காக கட்டபட்ட பாலங்கள் கூட ஒவ்வொன்றாக இடிந்து விழுந்து கொண்டுதான் இருக்கிறது கல்வியை இவர்கள் மொத்தமாக நம்புவதற்கு தயாராக இல்லை


கோவில்கள் மடங்கள் பஜனைகள் மதவெறி கூச்சல்கள் மாற்று மதத்தினரை தாக்குவதற்கான போக்கிரிகளை வளர்த்தெடுப்பது போன்ற கேடான செயல்களை மட்டுமே செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது ஒட்டுமொத்த தேர்தல் அமைப்பையும் சீர்குலைப்பதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார்கள்..... வட இந்திய மக்கள் விழிப்புற்று இவர்களை வீழ்த்த வேண்டும் அதிகாரத்திலிருந்தும் ஆட்சியில் இருந்தும் துரத்த வேண்டும் என்று நினைத்தாலும் 

வாக்குப்பதிவு எந்திரங்கள் வழியாக இவர்கள் தில்லுமுல்லு செய்வதற்காக ஏராளமான வழிவகைகளை செய்யும் ஒரு படையையே வைத்திருக்கிறார்கள்..


இவர்கள்தான் எமர்ஜென்சி என்ற ஒரு மோசமான நிகழ்வை பாசாங்காக திரும்பத் திரும்ப பேசுகிறவர்களாக இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் அதைவிட 100 மடங்கு கொடூரமான கொடிய அரசியல் சித்தாந்தத்தை கொண்டவர்கள் என்பதை  தமிழ் நாடு அறிந்து வைத்திருக்கிற அளவு வட இந்தியர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்ற சந்தேகமே நமக்கு எழுகிறது. 


தமிழகத்திலும் இவர்கள் தங்களது வேலையை செய்வதற்கு துணிந்து இருக்கிறார்கள் அதன் அடிப்படையில் தான் பல லட்சம் வட இந்திய தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் ஓட்டளிக்கும் சூழலை உருவாக்கி அவர்களை அரசியல் தில்லு முள்ளை தங்களுக்கு சாதகமாக மாற்ற துணிந்திருக்கிறார்கள்.. இது சாதாரண விடயம் அல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனை அவர்களது சமூக பொருளியல் அரசியல் வளர்ச்சி அனைத்திலும் கேடு விளைவிக்க கூடிய செயலாக அது மாறும் வட இந்தியர்களின் பலம் தமிழகத்தில் அதிகரிப்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனுக்கு கேடு விளைவிக்கிற நிலைமை இப்போது வளர தொடங்கி இருக்கிறது...

தமிழகத்தின் தனித்துவத்தை சீரழிக்கிற இவர்களது வேலை திட்டத்தின் ஒரு பகுதியிது.. சனநாயக பண்புள்ள இளைஞர்கள் இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் தமிழ் இளைஞர்கள் போராடியதெல்லாம் ஒன்றுமே கிடையாது அதைவிட பன்மடங்கு பல நூறு மடங்கு கேடான சிக்கல் வட இந்திய தொழிலாளிகளை தமிழக வாக்காளர் பட்டியலில் இணைப்பது. பயங்கர ஆபத்து நம்மை நோக்கி வருகிறது அதை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

Comments