தத்துவம் என்பது என்ன?

                                         



இந்தியா ஒரு ஏழை நாடாக இருந்தது இப்போது அது வளரும் நாடாக இருக்கிறது அது எப்போதும் வளரும் நாடாக மட்டுமே இருக்கும் காரணம் இந்த நாட்டில் உள்ள தத்துவம்.... 


இங்கு யார் வளர வேண்டும் யார் வளரக்கூடாது யாரெல்லாம் வளர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்கிற மிகப்பெரிய சமூக சச்சரவு குப்பைகள் மலிந்த ஒரு நிலத்தில். .. 

சட்டங்களும் திட்டங்களும் வெளிப்படையானதாக இல்லை அது ஒரு சார்பானதாக பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கிறது ஏழை எளிய மக்கள் இங்கு எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியுமே தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் என்பதை யாராவது மறுக்க முடியுமா? 


இந்தியா வளமுள்ள நாடாக மாறுவது யாரோ ஒரு பிரதமராலோ ஏதோ ஒரு கடவுளாலோ நடக்கக்கூடிய விடயம் அல்ல ஒருவேளை இன்றைய சூழலில் இன்றைய அரசியல் அதற்கான எந்த அறிவும் அற்ற தலைவர்களை தான் நாம் கொண்டிருக்கிறோம். .. 


ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள்? 


என்று யோசித்தால் அதற்கு வேறொன்றுமே காரணம் இல்லை அந்த ஏழைகளே தான் காரணம் ஏனெனில் ஏழைகள் நாம் ஏழைகளாக இருப்பதற்கு விதிக்கப்பட்டவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள் தங்களுக்கான தீர்வுகளை மந்திரம் மாயம் மற்றும் கோவில்களில் போய் தேடிக் கொண்டிருக்கிறார்கள்

கல்வி நமக்கு விடுதலை தரும் என்ற ஒரு புதிய கண்ணோட்டம் இந்த ஜனநாயகத்தில் இப்போது வேரூன்றி இருக்கிறது என்பது நமக்கு ஒரு ஆறுதலான விடயம் ஆனால் அதிகாரங்கள் அந்த கல்வியையும் எப்படி நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது என்கிற பார்வை நமக்கு வேண்டும். .. 

அந்த திருகமான பார்வைகள் நமக்கு வேண்டும் என்றால் நம் நாட்டின் தத்துவ செயல்பாடுகள் குறித்த புரிதல் நமக்கு வேண்டும்

நம்மிடம் இருப்பவைகள் தத்துவங்கள் தானா அவை நம்மையும் நம் தலைவர்களையும் நம் இஞர்களையும் வழி நடத்துகிறதா என்கிற கேள்வி நமக்கு இப்போது அவசியமான ஒன்று


இந்தியாவின் தத்துவமே ஒரு மிக மோசமான ஏழை தத்துவம் தான் அது பணக்காரன் ஒருவன் பணக்காரனாய் இருப்பதற்கும் ஒருவன் ஏழையாய் இருப்பதற்கும் ஒருவன் பிச்சைக்காரனாய் இருப்பதற்கும் ஒருவன் முடவனாய் இருப்பதற்கும் விதியே காரணம் என்ற கேடுகெட்ட ஏழை தத்துவத்தை கொண்ட ஒரு நாடு அந்த தத்துவத்தின் படி ஒரு மனிதன் விடுதலை அடைய வேண்டுமென்றால் அவனுக்கு அவனே விடுதலை அடைய வேண்டும். .. 

அவனுக்கு அவனே ஒளியாய் இல்லாத போது அவனுக்குள் அவனே எப்படி விடுதலை அடைய முடியும். 


அற்புதமான தத்துவங்கள் இந்த தேசத்தில் ஒளிர்ந்து செழித்திருக்கிறது நாம் அதை கண் கொண்டும் பார்க்காத ஏழை சமூகமாகவே இருக்கிறோம் புத்தன் உனக்கு நீயே ஒளியாய் இரு என்ற தத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே தந்தான் ஆனால் நாம் அதை ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை




வள்ளலார் மிக சமீபத்தில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொல்லும் அளவுக்கு மானுடம் தனக்கு தானே விடுதலை அடைய வேண்டிய நுட்பமான வரிகளை நமக்கு தந்தார் நாம் அவரையே சிலையாக்கி பாலபிஷேகம் செய்து கொண்டிருக்கிறோம். .. 


நம் சித்தர்களின் கருத்துக்களை நாம் எந்த அளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறோம். . 


நானே பெரியவன். . எனக்கு அடுத்துள்ளவன் சிறியவன் எனக்கு ஒரு வாழ்க்கை அவனுக்கு வேறு ஒரு வாழ்க்கை இது ஒரு விதிக்கப்பட்ட விதி இந்த விதியிலிருந்து நீயும் நானும் தப்ப முடியாது என்ற கேடுகெட்ட சித்தாந்தத்தை கொண்ட தத்துவங்களை நாம் தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறோம் 


ஆனால்.. என்னைப் போல நீ உன்னை நேசிப்பது போல் என்னையும் உன் அயலானையும் நேசி அன்பே அனைத்திலும் உயர்ந்தது என்ற அற்புதமான நம் சொந்த தத்துவத்தை இந்த நாட்டை விட்டே துரத்தி விட்டோம் பிறகு இது ஏழை நாடாகவும் வளரும் நாடாகவும் இருப்பதை யாரால் மாற்ற முடியும் என்பதை ஒவ்வொரு இளைஞனும் சிந்திக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். ... 


பழைய தத்துவங்களை குப்பைத் தொட்டிகளில் தூக்கி வீசி எரிந்து புதிய தத்துவங்களை சிந்திக்க வேண்டும் உலகின் மாசற்ற அற்புத தத்துவங்கள் இருக்கின்றன.... நம்மோடு சேர்ந்து விடுதலை பெற்ற நாடுகள் இன்றைக்கு உலகின் உச்சாணி கொம்பில் பொருளாதாரத்தில் அறிவியலில் உலகை வியக்க வைக்கிறது காரணம் அந்த நாட்டு மக்கள் கை கொண்டு இருக்கிற தத்துவங்கள் தான். .. 


அந்த தத்துவங்களை தான் நாம் இப்போது நமது வாழ்க்கையில் நுகர்ந்து கொண்டிருக்கிறோம் அந்த தத்துவங்களை பற்றி எல்லாம் நாம் சிந்திக்க வேண்டும் ஏன் இந்த தேசம் எப்போதும் எப்போதும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற கேடுகெட்ட குப்பைகளால் எரிந்து கொண்டிருக்கிறது மக்களாட்சி வந்த பிறகும் ஏன் கேடு கெட்டவர்களின் அதிகாரத்தில் நாம் சிக்கி விழுந்து கொண்டிருக்கிறோம் ஏன் நம்மை சுரண்ட அனுமதிக்கிறோம் சுரண்டல்கள் இங்கு நியாயமாக்கப்படுகிறது சுரண்டலை தடுப்போம் என்று கத்திக் கொண்டு வருகிற மார்பில் அடித்துக் கொண்டு வருக்கிற ஒவ்வொருவனும் ஏன் நம்மை சுரண்டிக் கொண்டே இருக்கிறான் நம் நாட்டின் உண்மையான நிலைதான் என்ன நூற்றி நாற்பது கோடி மக்கள் உள்ள இந்த நாட்டில் ஏன் மக்கள் செல்வமாக கருதப்படாமல் ஒரு தொகையாகவே கருதப்பட்டு சாதியாகவும் மதமாகவும் பிளவு பட்டே கிடக்கிறோம் ஏன் இந்த நாட்டின் சகல வளங்களும் சகலரும் நுகர முடியாத கொடூர சிக்கலுக்கு ஆளாகிறோம் ஏன் பழங்குடிகள் மலைகளில் கொல்லப்படுகிறார்கள் ஏன் அதிகாரத்தில் இருக்கிற ஏழை எளிய மக்கள் எப்போதும் வெவ்வேறு இடங்களுக்கு துரத்தப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் இந்த நிலையாமை ஏன் துரத்தப்பட்டவர்கள் மீண்டும் தங்களுடைய புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் மீண்டும் மீண்டும் ஏழைகள் தங்கள் வாழ்வை தொடங்கி கொண்டே இருந்தால் எப்போதுதான் அவர்கள் தங்கள் வாழ்வை வாழ்வது.. . . 


ஏதோ பாதிக்கப்படும்போது தெருவில் வந்து கூச்சல் விடுவது வயிற்றில் வாயில் அடித்துக் கொள்வது இதற்கெல்லாம் தீர்வே கிடையாது இந்த நாட்டின் ஒட்டுமொத்த தத்துவ மனோபாவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அது புரியாமல் ஒரு மனிதன் விடுதலை அடையவே முடியாது விடுதலை என்பது தன்னை உணர்வது 



உனக்கு நீயே ஒளியாய் இரு. .. 


ஆமாம் தத்துவம் என்பது தான் என்ன?

Comments