நான் காங்கிரஸ்காரன் இல்லை 


ஒரு இந்திய குடிமகனாக 

ஒரு எழுத்தாளனாக 

உறுதியாக என்னால் சொல்ல முடியும் அன்னை இந்திராவுடன் 

பிரதமர் மோடியை ஒப்பிடுவதற்கு 

ஒரே ஒரு நல்ல விடயம் கூட சொல்ல முடியாது... அப்படியே இருந்தாலும் அந்த நல்ல விடயத்தால் பயன்பட்டது யார்? இந்திராகாந்தியுடனே ஒப்பிட முடியாது என்றால் நேருவுடன் ஒரு போதும் ஒப்பிட முடியாது.. மீட நம்பிக்கையில் திளைத்த இளம் இந்தியாவை அறிவியல் பாதைக்கு திருப்பிய முக்கிய பணியை நேரு செய்தார் என்பதை நம்மால் மறுக்கவே முடியாது.


இந்தியாவின் வளர்ச்சியை சீரழித்த ஒரு மோசமான பிரதமர் காரணம் அவர் சார்ந்திருக்கிற அந்த மோசமான அமைப்பு ...  இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சி என்ன? ஏற்கனவே இருந்த அரசு கட்டமைப்புகளை சீரத்து அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்று செய்துள்ள செயல்களால் யாருக்கு லாபம்?


இந்த மூன்று ஆட்சி காலத்திலும் வடமாநிலங்களில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் பயன்கள் என்ன? கட்டுகிற பாலங்கள் கூட இடிந்து விழுகிறது.. உலக நாடுகளில் பாலங்களை அமைப்பதில் உலக சாதனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் வளரும் நாட்டில் கட்டுகிற பாலங்கள் இடிந்து விழுகிறது இது ஊழலின் அப்பட்டமான கேடுகளில் ஒன்று என்பது கூடவா நமக்கு புரியவில்லை 

கொரோனா காலத்தில் மக்கள் பெயரை சொல்லி வாங்கிய பிரதமர் கேர் நிதி என்ன ஆனது? தனியார் அறக்கட்டளை அந்த நிதியை யாருக்காக செலவழிக்கிறது மக்களின் பெயரில் பிரதமர் வாங்கிய அந்த நிதி எதற்கு செலவிடப்படுகிறது எவ்வளவு நிதி வந்து சேர்ந்தது என்பது கூட வெளி உலகுக்கு தெரியபடுத்தாதது அப்பட்டமான ஊழல் தானே?


வெறும் பாவனை, பாசாங்கு, வசனம், அலங்காரம் இதன் வழியாக ஒரு மாபெரும் தேசத்தின் வளர்ச்சியை நோக்கி நகர்த்தி விட முடியுமா? உலகம் எங்கும் போய் பார்த்து வருகிற பிரதமருக்கு அது கூட தெரியாமல் போன பின்னணி என்ன? அதன் காரணம் என்ன? காரணம் அவர் சார்ந்திருக்கிற அமைப்பு தான் அதன் காரணம் என்று நம்மால் உறுதியாக புரிந்து கொள்ள முடிகிறது. 


ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு எந்த அரசியலும் அறிவியல் வளர்ச்சியோ பொருளாதார வளர்ச்சியோ சமூக வளர்ச்சியோ அடைந்து விட முடியாது அப்பட்டமான வளர்ச்சி தத்துவத்தை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய மிக அவசியமான ஒரு காலம் இது, ஆனால் மக்கள் புரிந்து கொள்கிறார்களா என்பது தான் நமக்கு சந்தேகமாக உள்ளது காரணம் மக்கள் உள்ளூர் தத்துவங்களால் நாசமாக்கப்பட்டு இருக்கிறார்கள்... பல விடயங்களை அவர்கள் சிந்திக்காமல், சாதி மற்றும் ஆன்மீக மூடநம்பிக்கைகளால் தங்களைத் தாங்களே தொலைத்துக் கொள்கிறார்கள் அதற்கு இந்த அரசே அவர்களை அந்த வழிக்கு அழைத்து செல்கிறது என்பதுதான் வரலாற்றுப் பிழையாக இருக்கிறது...


இந்தப் பிழைகளை நேரு ஆட்சி காலத்திலோ இந்திரா ஆட்சி காலத்திலோ அவ்வளவு மோசமாக இருந்ததில்லை என்று நம்மால் உணரும்போது ஒப்பீட்டு அளவில் நாம் இந்திரா அவர்களின் ஆட்சி காலத்தை நினைவு கூறுகிறோம்.


பண மதிப்பிழப்பு, இப்போது வெளிவருகிற 

கோத்ரா ரயில் சம்பவம், 

தர்மசாலா படுகொலைகள், 

கொரோனா காலத்தில் அறிவியலுக்கு எதிராக இவர்கள் செய்த பிரச்சாரங்கள் 

சிகிச்சை இலவசமாக தர மறுத்த போக்கு 


இன்னும் எத்தனையோ பட்டியல் இட்டால் 

கசப்பான விடைகளே மிஞ்சும் 

அமெரிக்க டாலரை இந்திய ரூபாய்க்கு இணையாக மாற்றி விடுவோம் என்றெல்லாம் சொன்னார்கள் 

ஒவ்வொருவருக்கும் 15 லட்ச ரூபாய் வங்கி கணக்கு செலுத்தப்படும் என்றார்கள் 

இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற ஆசை வார்த்தைகள்,


கடைசியில் இப்போது பொருளாதாரத்தில் நாம் பின்தங்கி இருக்க பணக்காரர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் மிக மோசமான ஏழைகளாக மாறி இருக்கிறார்கள்.


இந்த 15 ஆண்டுகளில் உலகம் வெகு வேகமாக முன்னேறி எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கிறது...  நாம் இப்போது கடவுளின் நலன்களுக்காக அவரது கோவில்களுக்காக அவரது செல்வங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்... கடவுளை காப்பதற்காகவே ஒரு அரசு இயங்குகிறது. உள்ளது இதெல்லாம் உலக நகைச்சுவை 🙊🙉🙈


ஒரு மனிதனை, ஒரு மனிதனின் ஆளுமையை வளர்ப்பதும் சீரழிப்பதும் அவர் சார்ந்திருக்கும் தத்துவம் அதன் அடிப்படையில் மோடி குறிப்பிட்ட சமூகத்துக்கான சுயநலமான தத்துவம் அவரை ஒட்டுமொத்த இந்தியாவின் நலனுக்கான பிரதமராக மாற்ற தவறிவிட்டது என்பது ஒரு பார்வையாளனாக உறுதியாக நம்மால் சொல்ல முடியும். 


இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கான தத்துவத்தை யார் ஏற்று அரசியல் செய்கிறார்களோ அவர்களை தான் இந்த மக்கள் அங்கீகரிக்க வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தத்துவத்தை பின்பற்றுகிற ஒருவரை, கடவுளை கோவில்களை மத நம்பிக்கைகளை மூலதனமாக வைத்து அரசியல் செய்கிற மத என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். பாகுபாடுகளை வளர்க்கிறவர்களையும் குறுகிய மனநிலையில் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் அதன் பலன் என்ன?  மக்கள் வளர்ச்சியை நோக்கி ஒருபோதும் போவதற்கான எந்த அறிவியல் காரணங்களும் இல்லை என்பதை மோடியின் இந்த மூன்றாவது ஆட்சி காலத்திலும் நாம் புரிந்துகொள்கிறோம்.. புரிந்துக்கொள்ளவில்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்கவே மன்னிக்காது....


ஆட்சிக்கு வருவதற்காக பொய் பித்தலாட்டங்களை நாடக பாணியில் பேசும் அரசியல்வாதிகளை மக்கள் புரிந்து கொள்ளாத வரை தங்கள் வாழ்வில் அவர்கள் சின்ன ஒளியை கூட சந்திக்கப் போவதில்லை என்ற அறிவியல் உண்மையை நாம் உரக்க சொல்ல வேண்டியுள்ளது. 


இப்போது அவர் தமிழகத்துக்கு வருகிறார் தப்பும் தவறுமாக திருக்குறளை சொல்லுவார் தமிழுக்கே தன்னை அர்ப்பணித்தது போன்று ஏதாவது பேசுவார் ஆனால் தமிழை ஒழித்துக்கட்டுவதற்காக அவர்கள் ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டுகிறார்கள் என்பது வெளிப்படை... மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே கிடையாது இதுதான் தமிழ் மீதான அவர்கள் பற்று என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். 


தமிழை அவர்கள் கொண்டாடாமல் போகலாம் பிரச்சனையில்லை ஆனால் அழித்துவிடும் வேலைகளை செய்யாமல் இருந்தாலே போதும் என்று நாம் கேட்டுக்கொள்ளுங்கள் வேண்டியுள்ளது.. பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வருகிறார்கள் என்றால் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் ஆனால் அப்படியான ஒரு விருப்பம் இப்போது தமிழகத்தில் இருக்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை....


இதைப் பற்றி எல்லாம் அவர்கள் ஒருபோதும் கவலைப்பட போவதில்லை ஏனெனில் அவர்கள் சித்தாந்தம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான நலனுக்காக அவர்கள் எதையும் செய்வார்கள் என்பதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டி இருந்தால் அவர்கள் முதலாளிகளுக்காக செயல்படுவார்கள் முதலாளிகளின் நலன்களை மட்டுமே சிந்திப்பார்கள் உயர் சாதி சமூகம் என்று சொல்லப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்காக மட்டுமே அவர்கள் ஓயாமல் வேலை செய்வார்கள் அவர்களுக்காக இந்த இந்திய நாட்டையே அர்ப்பணிக்கவும் அவர்கள் திட்டம் தீட்டுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம் மக்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே வரலாற்றின் தேவையாக இருக்கிறது 🍁


Comments