மூன்றாம் உலகப் போர் அச்சம்

 


முதல் உலகப் போருக்கு பிறகு ஒட்டுமொத்த பூமியின் அரசியலும் மாறியது முதலாளித்துவ சமூகங்களின் ஆட்சி முறையில் இருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி முறை சோவியத் ரஷ்யாவில் நிறுவப்பட்டது. 


அதன் பிறகு உலகமெங்கும் சிவப்பு அச்சம் என்கிற ஒரு அரசியல் பார்வை முதலாளித்துவ உலகை உலுக்கியது. அதிலிருந்து காலணி ஆதிக்க வெறியர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றுகிற நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள் அதனுடைய கூர் நிலைமையாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. .. சோவியத் ரஷ்யாவை வீழ்த்தி அதை அபகரிப்பது மட்டுமே ஹிட்லரின் நோக்கமாக இருந்தது அதன் வழியே அவர் இந்த உலகையே ஆள நினைத்தார். ஆனால் அவர் தன் சொந்த பதுங்கு குழியிலேயே முடித்து வைக்கப்பட்டார் என்பது உலக வரலாறு. 


இரண்டாம் உலகப்போர் மறுபடியும் இந்த உலகை வேறு விதமாக வடிவமைத்தது அதற்கு முன்பு வரை பிரிட்டன் பிரான்ஸ் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளின் வல்லாதிக்கத்தில் இருந்த உலகம் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்கா, ரஷ்யா என்கிற இரு வல்லரசுகளை உலகின் முன் வலுவோடு நிறுத்தியதுடன் பிரிட்டனும் பிரான்சும் பின்னுக்கு ஒதுங்கிக் கொண்டன  


அந்தக் கட்டத்தில் தான் சீனா இந்தியா போன்ற நாடுகளில் அரசியல் மாற்றங்கள் நடந்தது காலனி நாடுகள் விடுதலை பெற்றன. .. உலகில் பல நாடுகள் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றன


அதன் பிறகும் உலகில் பனிப்போர் என்ற பெயரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டே இருந்தார்கள் அதன் தொடர்ச்சியாக சோவியத் ரஷ்யாவின் பாட்டாளி வர்க்க அரசு உடைக்கப்பட்டது அது இன்னமும் பல்வேறு வடிவங்களில் புகைந்து கொண்டே இருக்கிறது. 


ஆனால் கியூபா, லத்தின அமெரிக்காவில் வெனிசுலா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் கம்யூனிசம் தொடர்ந்து வளர... 


 சீனத்தின் வளர்ச்சியை அதன் பிரம்மாண்ட பொருளாதாரத்தை அதன் அறிவியல் முன்னேற்றத்தை இப்பொழுது நாம் பார்க்கிறோம் அது ஒரு பக்கம் இருக்க இரண்டாம் உலகப் போருக்கு பிறகான மாற்றத்தில் பிரதானமான ஒன்றாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும் இன்று அது மிகப்பெரிய உலக வல்லரசாக எழும்பி நிற்கிறது. 


அதே நேரம் காலனி ஆதிக்கம் ஒழிந்த உலகிலும் போர்கள் நடந்து கொண்டுதான் இருந்தது ஐரோப்பாவில் ஐரோப்பாவுக்கு வெளியில் மத்திய கிழக்கில் நடந்த ஈராக் ஈரான் போர் பிறகு இந்திய பாகிஸ்தான் போர்கள் இப்போது நாம் பார்க்கிற உக்கிரேன் ரஷ்ய போர் இஸ்ரேல் பாலஸ்தீன போர் அதன் தொடர்ச்சியாக இப்பொழுது இன்றைய நாட்களில் உலகை மிரட்டுகிற இஸ்ரேல் ஈரான் போர் என்று நாம் போர்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் இன்றைய போர் அறிவியல் வளர்ச்சி மிக்க சூழலில் ஈரானின் இந்த ஆச்சரியமூட்டும் தாக்குதல் போர் உலகை, போர் விரும்புகிற வியாபாரிகளின் உலகை, அமெரிக்க வல்லாதிக்கத்தை ஒரு கூர்மையான இடத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறது. ஏனெனில் இஸ்ரேலிய ராணுவம் இஸ்ரேலிய பாதுகாப்பு முறைகள் இஸ்ரேலிய விமான விமானிகள் குறித்த உலகம் வியக்கும் ஏராளமான கட்டுக் கதைகளை முறியடித்து




இன்று ஈரான் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது அது மத்திய கிழக்கில் வல்லாதிக்கத்தை விரும்புகிற அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


அதன் விளைவாக அவர்கள் அவ்வளவு எளிதில் பின்வாங்கி விடுவார்கள் என்று நம்புவதற்கு இடமே இல்லை அதே நேரம் இன்றைய உலகில் சீனா தனது பலத்தை காட்டுவதற்கு விரும்பினால் ஒரு வேளை அது மிகப் பெரிய தொடர் போராக மாறுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது


இஸ்ரேல் தாக்கிய போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் இஸ்ரேலை பாராட்டக்கூடிய வார்த்தைகளை உச்சரித்தார்...


இஸ்ரேல் அதிபர் இப்போது ஈரானை முடிக்காவிட்டால் நாங்கள் முடிந்து விடுவோம் என்கிற போக்கில் அறிக்கை விடுகிறார். ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் படியாக ஈரானிய தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது அது அவ்வளவு எளிதான விடயமாக நாம் இப்போது அதை எடுத்துக் கொள்ள முடியாது ஏனென்றால் இப்போது நடக்கிற போர் பக்கத்து பக்கத்து நாடுகளுக்கு இடையிலான போர் அல்ல இது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் மூன்று நாடுகள் குறுக்கிடுகிறது அவர்களை தாண்டி தான் இவர்களின் ஆயுதங்கள் பறந்து போய் தாக்க வேண்டும் அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய போரில் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய இடம் என சந்தேகிக்கப்படும் இடங்களை நோக்கி குறி வைத்து தாக்கியிருக்கிறது. .. 


அது மிக மோசமான ஒரு ராணுவ நடவடிக்கை அதனால் பாதிக்கப்பட்ட ஈரான் தனது முழு பலத்தையும் காட்ட முயற்சிக்கும் இஸ்ரேலும் அவ்வளவு எளிதில் பின்வாங்கி விடாது ஏனெனில் அதன் பின்னால் அமெரிக்கா உறுதியாக நிற்கும் இந்த சூழலில் ஈரானின் பின்னால் ரஷ்யாவும், சீனாவும் அணிவகுக்க வாய்ப்புகள் ஏராளம்..


இது போன்ற சூழலில் மூன்றாம் உலகப்போர் என்கிற பயங்கரம் தலைக்காட்டுவதற்கான வளர்ச்சி பெறுவதற்கான சாத்திய கூறுகள் இன்றைய அறிவியல் போர்க்கால பொருளாதார சூழல்கள் நமக்கு அச்சுறுத்தலை தருகிறது இந்த நிலையில் இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும் என்று நாம் யோசிக்கும் பொழுது


இந்தியா வெளிப்படையாக இஸ்ரேலை ஆதரிக்கிறது என்பது நாம் அறிந்தது தான் இந்தப் போர் நம் மண்ணில் நடக்காமல் இருக்கலாம் ஆனால் அதனுடைய பாதிப்பு நம் தலையிலும் தான் வந்து விழும் நாம் ஒருவேளை வெடி சத்தங்களை கேட்காமல் போகலாம், பதுங்கு குழிகளுக்குள் போய் பதுங்க வேண்டிய அவசியம் இல்லாமல் கூட போகலாம் ஆனால் போரின் பொருளாதார சிக்கல்களை நாமும் சந்திக்கவே நேரிடும் ஏனெனில் சண்டையிடும் நாடுகள் பெட்ரோலிய வளம் கொண்ட பகுதியில் இருக்கிறது இன்றைய நாட்களில் உலகின் பெரும்பாலான பொருளாதாரத்தை பெட்ரோலிய பொருட்கள் தீர்மானிக்கின்றன அந்த விதத்தில் வேறு பல விடயங்களாலும் இந்தியர்களாகிய நாமும் இந்த போரால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது ஒருவேளை இப்போர் மூன்றாம் உலகப் போராக உருபெறுமானால் அதை நினைத்துப் பார்ப்பதற்கு கூட நம்மால் முடியவில்லை. . 


ஒரு வேளை அப்படியான போர் நிகழுமானால் இந்த உலகின் ஆதிக்கங்கள் மறு கட்டமைப்பு செய்யப்படும், பொருளாதார நிலைமைகள் வேறு விதமாக்கப்படும், அதை தீர்மானிக்கிற போராக இது வளர வேண்டும் என்று வல்லாதிக்கங்கள் முடிவு செய்துவிட்டால் எளிய மக்கள் பகடை காய்கள் தான். . போர் மிக ஆபத்தானது அது எளிய மக்களை மிக மோசமான தாக்குதலுக்கு பாதிப்புக்கு உள்ளாக்கி விடும் என்ற பொதுக் கருத்து உண்மைதான் என்றாலும் போர் அனைத்து விதமான மக்களையும் நாசமாக்க கூடிய ஒன்று அதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படவே செய்வார்கள் போரின் ஆரம்பத்தில் பாதிப்புகளை நாம் கணிக்கலாம் ஆனால் போரின் முடிவில் அந்த பாதிப்பு என்னவாக இருக்கும் என்பதை முழுமையாக போருக்கு முன்பாக கணிக்கவே முடியாது அவ்வளவு பயங்கரமானது போர் அதுவும் இன்றைய நாளில் உள்ள ஆயுதங்கள் மனித குலத்தையே அழித்துவிடக் கூடியவை அதனால் போரில் ஈடுபட்டிருக்கும் அரசுகள் அதை கவனித்தில் கொண்டு தான் செயல்படுவார்கள் என்றாலும் இஸ்ரேல் போன்ற அடாவடியானவர்கள் அணு ஆயுத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது அணு ஆயுதத்தையே ஏவுவதற்கு சமமான செயல் இப்படியான அடாவடித்தனமான ராணுவம் நடக்கும் நடவடிக்கைகள் முதல் இரண்டாம் உலகப் போரிலேயே இந்த உலகம் சந்தித்தது தான் என்கிற அச்சம் இப்போது நமக்கு உண்டாவது இயல்பு அடிப்படையில் நாம் போரை வெறுக்கிறோம்

போரை எதிர்க்கிறோம் போர் மிக ஆபத்தானது அது அனைத்து தரப்பு மக்களையும் நாசம் செய்து விடும் உண்மையில் இந்த போர் மூன்றாம் உலகப்போர் நிலைமைக்கு வளர்ச்சி பெற்று விடுமோ என்ற அச்சம் இப்போது உலகெங்கிலும் ஏற்பட்டிருக்கிறது நமக்கும்


Comments