இஸ்ரேலின் மக்கள் அரசு தனது பொறுப்பற்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்கின்றனர்

                                   


ஒத்தைக்கு ஒத்தை என்று சண்டையிட்டால் #இஸ்ரேலை பத்து நாட்களில் #ஈரான் முடித்துவிடும் இப்போதைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது 


இப்போது பெரியண்ணன் #அமெரிக்கா கொஞ்சம் திகைப்பில் இருக்கிறது அவசரப்பட்டு இறங்கி அடிபட #ட்ரம்ப் விரும்பவில்லை ஏனெனில் அவர் ஒரு தேர்ந்த முதலாளி இஸ்ரேல் இந்த அளவுக்கு #அடி வாங்கும் என்று அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்கவில்லை ஏன் இஸ்ரேலும் அப்படி நினைக்கவில்லை தனது #ஐயன்_டோம் 

 எதிர்பாத்த அளவுக்கு செயலாற்றவில்லை என்பதுடன் அது தன்னையே தாக்கும் என்றும் அவர்கள் இதுவரை அறிந்திருக்கவில்லை. அதை விடுவோம் .


ஈரான் இப்போது பயன்படுத்திய ஏவுகணைகளை விடவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இப்போது பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள் அது மிக மோசமான விளைவுகளை உண்டாக்க கூடும் இன்னும் கூட அவர்கள் எப்படிப்பட்ட வியூகங்களை அமைப்பார்கள் என்று இஸ்ரேல் ஆதரவு ஐரோப்பிய, அமெரிக்க இஸ்ரேலிய நாடுகளுக்கு ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. .. 


இந்த சூழலில் #ரஷ்யா, #சீனா, #வடகொரியா, ஈரானுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருப்பது போர் பிராந்தியத்தில் மிக கூடுதலான பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஏனெனில் ரஷ்யாவை அமெரிக்கா #உக்ரேன் போர் வழியாக வழியாக ஓரளவு அறிந்து வைத்திருக்கும் ஆனால் அவர்களுக்கு சீனாவைப் பற்றி முற்றிலும் தெரியவே தெரியாது என்று கூட நம்மால் சொல்ல முடியும் அதே நேரம் வடகொரியா எந்த துணிச்சலான காரியத்திலும் இறங்கி விடக் கூடிய ஆபத்து இருக்கிறது என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உண்டு ஐரோப்பியர்கள் இப்போது வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லாமல் சத்தமாக பேசாமல் கமுக்கமாக பேசிக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் 


இதையெல்லாம் ஈரான் இந்த ஒரு வார காலத்தில் சாதித்தது என்பது ஒரு உலக அதிசயம் தான் போர் சூழலில் ஈரான் தனது #ஆரம்பகட்ட #வலிமையை மிக சிறப்பாகவே நிகழ்த்தி காட்டிவிட்டது ஏனெனில் இஸ்ரேல் தன் மக்களை பதுங்கு குழிகளுக்கு போக சொல்லும் என்று உலகம் எதிர்பார்த்து இருக்கவில்லை ஏன் இஸ்ரேலியர்கள் கூட எதிர்பார்க்கவில்லை அதனால் அவர்கள் அச்சத்தில் கதற தொடங்கி விட்டார்கள் 


மிக சமீபத்தில் ஒரு செய்தியில் #நெதன்யாகு அவர்களின் மகனை சில இஸ்ரேலியர்கள் போட்டு தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. .. 


சொகுசாக வாழ்ந்தவர்கள் தாங்கள்தான் உலகின் மிகப்பெரிய அறிவு ஜீவி என்ற மலைப்பில் வாழ்ந்தவர்கள், உலகமே தங்களின் அறிவை கொண்டாடுகிறது என்ற இறுமாப்பில் இருந்தவர்கள்

உண்மையில் மிக சொகுசான நகரங்களில் ஒன்றான tel aviv... ஈரானிடமிருந்து இப்படி ஒரு மோசமான தாக்குதல் எதிர்பார்த்து இருக்கவே இல்லை அதனால் அந்த மக்கள் மிக கலக்கமடைந்திருக்கிறார்கள். ... 



உண்மையில் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இப்போதைக்கு போரை தொடர விரும்பவில்லை ஏனெனில் அவர்கள் மேலும் துயரங்களை அனுபவிக்க தயாராக இல்லை அரசு தனது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு இஸ்ரேலியர்கள் இப்போது குரல் எழுப்ப தொடங்கி விட்டார்கள் ஆனால் அதே நேரம் ஈரான் மிக கம்பீரமான முதல் அடியை எடுத்து வைத்திருப்பதாக அந்த நாட்டு மக்கள் தங்கள் அரசின் மீது பெருமை கொள்கிறார்கள் ஆசியா, தெற்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்க மக்கள் சமாதானத்தை விரும்புகிற பெரும்பான்மையான மக்கள் இஸ்ரேல் உண்டாக்கிய

பாலஸ்தீனத்தின் துயரத்தை பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை அவர்கள் இஸ்ரேலில் கொடுமையை எதிர்த்து குரல் கொடுக்கிற மனநிலையில் இருந்த சமயத்தில் தான் இஸ்ரேல் மேலும் ஒரு மிக மோசமான ஒரு தவறை செய்தது அதுதான் ஈரான் மீதான அதன் தாக்குதல் இப்போது அது பதிலுக்குப் பெற்ற அடி பலமாக இருப்பதால் அமெரிக்க அதிபர் ஈரானின் போர் நடவடிக்கையை மெச்சுகிற அளவுக்கு அது போய்விட்டது. .. 


இதுதான் போர். ..

மிக மோசமான போர் என்ன மாதிரியான விளைவுகளை வேண்டுமானாலும் ஒரு சில நாளில் எட்டி விடலாம் இதற்கான பல அனுபவங்களை #இரண்டாம் #உலகப் போரில் உலக மக்கள் பார்த்திருக்கிறார்கள் 


இப்போது சேர்ந்திருக்கும் அணிகள் மிக அபாயகரமானவை அதே நேரம் மிக வலுவுள்ளவை ஒருவேளை இந்த போர் மூன்றாம் உலகப்போராக வடிவெடுப்பதற்கான... 

வாய்ப்புகளும் இருக்கிறது ஆனால் அது அவ்வளவு எளிதில் அந்த #பயங்கரம் உருவாவதற்கான சூழலை உலக நாடுகள் எதுவுமே எடுக்காது என்பது தான் நம் நம்பிக்கை. .. ஏனெனில் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாத அளவுக்கான ஒரு தாக்குதலை ஈரான் தந்துவிட்டது இன்னும் கூட அது மிக அபாயகரமான #ஏவுகணைகளை வைத்திருக்கலாம் அது அமெரிக்கா வரை கூட பாய்வதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என்ற அச்சங்கள் அமெரிக்காவுக்கே இப்போது இருக்கிறது அதனால் #திமிர் தனத்தை விட்டொழித்து இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு முதலாக முன்வர வேண்டும் ஏனெனில் அதுதான் முதலாவதாக ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது அதனால் அந்த பொறுப்பும் கடமையும் இஸ்ரேலுக்கு மட்டும்தான் இருக்கிறது. . . 


இது ஒரு வகை சமாதானத்திற்கான வழிமுறை! ஒருவேளை அப்படி உடன்பாடுகள் ஏற்படுமானால் ஈரானும் அடி பணியலாம் அதன் பிறகு மிக முக்கியமான ஒப்பந்தங்கள் எல்லா நாடுகளுக்கு இடையிலும் ஏற்படக்கூடிய மிக முக்கியமான இடத்தை நோக்கி உலகம் தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால் அழிவுமிக்க மிக மோசமான ஏவுகணைகள் உற்பத்தி இனிமேல் தான் மிக அதிகமாக உருவாக்கப்படும் அதற்கான எல்லா காரணிகளும் தொடங்கிவிட்டது அதை யாராலும் மறுக்கவே முடியாது அதை யாராலும் தடுக்கவும் முடியாது. ஏனெனில் வலுவான ஆயுதங்கள் இருந்ததால்தான் ஈரான் கம்பீரமாக தனது எதிரியை அடிக்க முடிந்தது 1700 கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள எதிரியை தாக்குகிற வல்லமை ஏவுகணைகளால் மட்டுமே சாத்தியமானது. 



போர் உலகம் இனி ஏவுகணைகளின் வலிமையை கொண்டே நிர்ணயிக்கப்படும்! 


போரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துக் கொள்வதுதான் இஸ்ரேலுக்கு நல்லது ஏன் உலகத்துக்கே அது தான் மிக மிக நல்லது. போர்கள் ஒழியட்டும் #இனவெறிகள் அழியட்டும் நான் தான் #அறிவாளி என்கிற கொக்கரிப்புகள் இனி மண்ணோடு மண்ணாக போகட்டும் மனிதர்கள் உண்மையான மனிதர்களாக மாறட்டும் #சமாதானம் தழைக்கட்டும் என்பதே நம் அவா🍁


ஒலியை விட 15 மடங்கு வேகமாக பாயக்கூடிய

Fattah HIFERSONIC ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்த தொடங்கிவிட்டது மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடிய ஏவுகணை 700 கிலோவுக்கும் அதிகமான வெடி பொருட்களைக் கொண்டது 👇.

Comments