இஸ்ரேல் - ஈரானின் போர்கள் விதைக்கும் காயங்கள்
உலகப் போருக்கு பிறகு ஏராளமான நாடுகளுக்குள் சண்டைகள் நடந்திருக்கிறது சீரழிவுகள் ஏற்பட்டு இருக்கிறது... ஆனால் இந்தப் போர் உலகின் போக்கில் மாற்றங்களை உண்டு பண்ண கூடிய பயங்கரமான போர்
ஒவ்வொரு உலக நாடுகளும் இதை உன்னிப்பாக கவனிக்கின்றன வல்லரசு நாடுகளும் அணி சேருவதற்கான பேச்சுகளை தொடங்கிவிட்டன... ஏற்கனவே ரகசியமாக அவர்களுக்குள் பேச்சுகள் முடிவாகி இருக்கும்
இன்னொரு ஒரு #ஆபத்தான தாக்குதலுக்கு பிறகு அவர்கள் வெளிப்படையாக அறிவித்துக் கொள்வார்கள் அப்படியான ஒரு சின்ன அறிவிப்பு தான் #ரஷ்யாவின் இந்த பேச்சு #அமெரிக்கா எதற்கும் தயாராகவே இருக்கும் காரணம் அவர்கள் நாட்டில் எந்த சண்டையும் நடைபெறப் போவதில்லை. அவர்கள் நிலத்தில் போருக்கான காயங்கள் உண்டாவதற்கான சாத்திய கூறுகள் மிக மிக குறைவு தான் உலகப் போராக மாற்றமடைந்தால் ஒருவேளை அவர்கள் நிலமும் பாதிக்கப்படக்கூடும் அவர்களுடைய ராணுவம் தான் மத்திய கிழக்கு ஆசியாவிலும் மத்திய தரைக் கடல் பகுதியிலும் தங்கள் ராணுவ தொகுப்புகளை வைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு வீரர்கள் இழப்பு இருக்கலாம் நிலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இழப்பு. .. இப்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம்
அவர்கள் ஒரு பெருத்த ஆயுத வியாபார ஆட்டத்தை ஆடி பார்ப்பார்கள் உயிரிழப்புகளை பற்றி அவர்களுக்கு கவலை இருக்காது அதாவது ஆயுத வியாபாரிகளுக்கு. ..
ட்ரம் போன்ற ஆட்கள் போரிலும் போரின் சார்பிலும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இருப்பார்கள் என்பதை எல்லா உலகப்போர்களின் வரலாறும் நிரூபித்து இருக்கிறது. ...
ஆனால் சொகுசாக வாழ்ந்த இஸ்ரேலியர்கள் சமாதானத்தை பற்றியோ போரை பற்றியோ சிந்திக்காமல் சுகவாழ்வை பற்றி மட்டுமே சிந்தித்த இஸ்ரேலியர்கள், பக்கத்து நாட்டில் பட்டினியால் சாகும் குழந்தைகளை பற்றி எந்த குரலும் எழுப்பாத சமாதானத்தை விரும்பிய இஸ்ரேலியர்கள், தங்கள் வீடுகளின் மீது குண்டுகள் விழும்போது ரோட்டில் வந்து இஸ்ரேலிய அதிகார வர்க்கத்தின் மீது கேள்வி எழுப்புகிறார்கள். ...
போர் எங்களுக்கு வேண்டாம் என்று கதறுகிறார்கள் பாலஸ்தீன மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். இராணிகளே போரை நிறுத்துங்கள் என்று #கெஞ்சுகிறார்கள் ஐந்து நாள் #சண்டைக்கே அவர்கள் தங்கள் சுகபோகங்களை விட்டுக் கொடுக்க முன்வராமல் கதறி அழுகிறார்கள் ஆனால் அதைப் பற்றி எல்லாம் #இஸ்ரேலிய #அரசு #அமெரிக்கா #அரசு கவலைப்பட போவதில்லை இது ஒரு பக்கம் இருக்கட்டும் உண்மையில் ஈரான் அரசு தன் மீதான அச்சத்தை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் காட்ட விரும்பும் ஒரு நிலைக்குப் போய்விட்டது அந்த நிலைக்கு இவர்களை தள்ளியவர்கள் இஸ்ரேலும் அமெரிக்காவும் தான் என்பதை எந்த நியாயமான பார்வையாளனும் மறுக்க மாட்டான்
இன்னும் ஒரு வாரத்துக்குள் இறுக்கம் தளர்ந்தால் ஓரளவுக்கு உலகம் தப்பிக்கும் ஒரு வாரத்துக்கு மேலும் தாக்குதல்களின் இறுக்கம் அதிகமாகி கொண்டே போனால் அது . ... அமெரிக்காவின் தலையீடு அமெரிக்காவின் தாக்குதல் என்ற நிலைக்குப் போனால் நிலைமை இன்னும் மோசமாகி வல்லரசுகளின் அணி சேர்க்கை நடைபெற தொடங்குவதை இந்த போரால் தவிர்க்க முடியாது!
குறிப்பாக மிக ஆபத்தான வல்லரசுகளான ரஷ்யாவும், சீனாவும் இன்னொரு அச்சுறுத்தலான வடகொரியாவும் எடுக்கிற முடிவுகள் ஆசியாவுக்கு மட்டுமல்ல ஐரோப்பாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்பது நமது பார்வை
போர் கொக்கரிப்புகள் இல்லாமல் உலகை அச்சுறுத்தும் பேச்சுகள் இல்லாமல் நியாயமான முறையில் மக்களின் துயரை அமெரிக்காவும் இஸ்ரேலும் புரிந்து கொள்வார்களா என்று நமக்குத் தெரியவில்லை
ஆனால் பொதுமக்களாகிய அமெரிக்க மக்களும் இஸ்ரேலிய மக்களும் அந்த அரசுகளுக்கு நெருக்குதல் தருவதன் மூலம் ஒருவேளை அவர்கள் போரில் இருந்து பின் வாங்கலாம் நியாயமான சமாதான பேச்சுகளை நடத்தலாம் ஆனால் இந்த இரண்டு அரசுகளும் அந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்று நமக்கு தெரியவில்லை ஏனெனில் ஈரானின் தாக்குதலை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை அதே நேரம் அந்த நாட்டு சராசரி மக்கள் போரை விரும்பவில்லை என்பதுதான் நாம் இதுவரையிலும் பார்த்துக் கொண்டிருப்பது. ....
ஐநா இதில் எந்த அளவுக்கு நியாயமாக நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை ஈரானும் ஐநாவை நம்பாது ஏனெனில் ஐநாவில் அமெரிக்கா இஸ்ரேலின் ஆதிக்கம் தான் அதிகம் அவர்கள் பேச்சின் படி தான் ஐநா நடந்து கொள்ளும் ஆனால் அது ஒரு போக்குக்கு சமாதானத்தை போரை நிறுத்துவதை பற்றி குரல் கொடுக்கும் ஆனால் அது உண்மையான நோக்கத்தோடு அதை செய்யாது இப்போது அமெரிக்கா ஈரானை #ஈராக் போல ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் வெறியோடு இருப்பதை உலகம் மறுக்கவே முடியாது தன் ஆட்சி காலத்தில் ட்ரம்ப் அதை செய்வதற்கான திட்டங்களோடு இருப்பார் அதை ஒருபோதும் ஈரான் அனுமதிக்காது அது ஒரு பெரிய ஆட்டத்தை ஆட ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டது தான் நாம் பார்க்கிறோம் இவ்வளவு சிக்கல்களும் இந்த போரில் இருக்கிறது இது சாதாரண போர் அல்ல
உலக நாடுகள் உலக நாடுகளின் மக்கள் இந்த போரை பொறுப்புணர்வோடு அணுக வேண்டும் போரை போரில் ஈடுபட்டுள்ளவர்கள் தவிர்க்க வேண்டும் வேண்டுகோளும் மனநிலையும் மிக அவசியம்
போர் மிகக் கொடூரமானது அதுவும் இன்றைய நாளில் உள்ள போர் மிக மிக கொடூரமானது போர் நடந்த பிறகும் சில பல வருடங்களாவது அந்த நிலம் காயங்களுடன் தான் இருக்கும். . அந்த காயங்களாக ஆற நீண்ட நாள் பிடிக்கும் அந்த பொருளாதார சுமையை உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் தான்
போர் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் நடந்தாலும் அதன் பாதிப்பு உலகில் உள்ள அத்தனை மக்களும் அனுபவிக்க வேண்டிய ஒன்று போர் மிக கொடூரமானது போரை தவிர்ப்போம்🍁




Comments
Post a Comment