தமிழ் கடவுள் பழங்குடியின தலைவன் முருகன் மாநாட்டில் பாரத் மாதா கி ஜே எதற்கு?


 உலகம் முழுக்க வளர்ந்த நாடுகளில் தத்துவஞானிகள் அந்த நாட்டின் போக்கை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.. அந்த மக்கள் கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் கற்று நிகழ்கால தத்துவத்துக்கு நிகழ்கால அறிவியலுக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்  அவை தான் இன்று உலகில் வளர்ந்த மலர்ந்த நாடுகளாக இருக்கிறது. 


இந்தியாவில்  நாட்டின் போக்கை பெரும்பாலும்  சுயநலமிக்க சாதி வெறி மதவெறி ஆட்களே பெரும்பாலும் தீர்மானிக்கிறார்கள் தங்கள் கருத்துகளால் தத்துவங்களால் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள் அதனால் தான் இன்னும் அது வளர்ச்சி அடையும் நாடாகவே இருக்கிறது... 

                                                              

தமிழ்நாடு  கொஞ்சம் தப்பிப்பிழைத்ததற்கு காரணம் ஆதியில் இருந்து தமிழ் சமூகத்தில் கொஞ்சம் அறிவார்ந்த மக்கள்  தோன்றி மக்களை வழிநடத்தி வருவது தான் வள்ளுவர் காலத்திலிருந்து அவ்வையார்... பிறகு சித்தர்கள் மிக சமீபத்தில் வள்ளலார், அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார், அண்ணா.... என  இன்று வரை அந்த தொடர்ச்சி அது நாளையும் தொடரும் அதனால் தமிழகம் தப்பியுள்ளது இல்லை என்றால் வட இந்தியர்கள் கதிதான் நமக்கும் ஆனால் அந்த அறிவு தொடர்ச்சியை இங்குள்ள பார்ப்பனிய பனியா கும்பலான காவி பாஜக கூட்டம்   தமிழர்களையும் வட இந்திய சமூகம் போல மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் அதன் ஒரு பகுதி தான் தமிழ் கடவுளான #முருகனை கையில் எடுத்திருப்பது முருகனை வழிபடுகிற இடத்தில் எதற்கு பாரத் மாதா கி ஜே உங்கள் பாரத் மாதா யார் லட்சுமியா சரஸ்வதி பார்வதியா காளியா? . . . . 

அந்த மாதா இந்திய பெண்களா?  பெண்களுக்கு இவர்கள் தரும் மரியாதையை ஒவ்வொரு மனசாட்சி உள்ள இந்தியனும் அறிந்தே வைத்திருக்கிறான்... 

ஆசியா, நிர்பயா, தொடங்கி குடியரசு தலைவரான பிறகும் கோவிலுக்குள் அனுமதிக்காத  மரியாதைக்குரிய முர்மு வரை  லட்சக்கணக்கான உதாரணங்கள் அந்த மதமே சொல்கிறது பெண் சந்தேகத்துக்குரியவள் அவளைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அப்படியானால் இவர்கள் எந்த பாரத் மாதாவுக்கு ஜே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி குறைந்த  அறிவுள்ளவனுக்கு கூட தோன்றும்  அதுவும் பழங்குடி தலைவனான தமிழ் கடவுள் முருகனுக்கு மாநாடு நடக்கும் இடத்தில் இந்த கோஷம் எதற்கு? 


பக்தியை அடித்தளமாகக் கொண்டு எவனாவது அரசியல் செய்கிறான் என்றால் அவன் பச்சையாக சமூகத்துக்கு கேடு விளைவித்து தனது வயிற்றை நிரப்பிக்கொள்ள திட்டமிடுகிறான் என்றுதான் பொருள் உலகம் முழுக்க அதுதான் நடந்திருக்கிறது. 


பக்தி என்பது அவரவர் தனிப்பட்ட மனநிலைக்குட்பட்டது. அது ஒரு கோவிலுக்குள்ளோ, தேவாலயத்துக்குள்ளோ, மசூதிக்குள்ளோ, வீட்டுக்குள்ளோ குடும்பமாக சேர்ந்து கூட்டமாக சேர்ந்து வழிபாடு செய்வது ஆனால் ஒரு பெரிய விளையாட்டு திடலில் சேர்ந்து பக்தியை வளர்ப்பார்களா? கலவரத்தை உண்டு பண்ணுவார்களா. ... 


அதில் அன்பு நிலைத்திருக்குமா? அராஜகம் நிலைத்திருக்குமா அதில் தனிமனித அமைதிக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா கடவுளை மனதுக்குள் முணுமுணுப்பது, மனதுக்குள் தியானிப்பது, கடவுளாகவே தன்னை உணர்வது, கடவுள் என்கிற ஒன்றுமற்ற ஒன்றுக்கு தன்னை அர்ப்பணிப்பது என்கிற மனோ நிலையில் இருந்து #பெகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட அயோக்கியர்களுக்கு எதிராக #ராணுவத்தை பயன்படுத்திய பிரதமருக்கு நன்றி என்று சொல்வதில் பொய் அது முடிந்து இருக்கிறது அந்த பக்தர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றே நாம் கருதுகிறோம் ஒருவேளை அவர்கள் விழித்துக் கொண்டால் பெகல்காம் #தாக்குதலில்  ஈடுபட்ட #அயோக்கியர்களில் ஒருவரையாவது #பிடித்தீர்களா அவர்களை தப்ப ஓடிவிட்டது எப்படி காஷ்மீரத்தில் பத்து அடிக்கு ஒரு ராணுவ வீரர் இருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோமே எப்படி இந்த 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடினார்கள் அதன் பின்பாக ஒளிந்து இருக்கிற மர்மம் என்ன இதையெல்லாம் நீங்கள் மக்களுக்கு சொன்னீர்களா? சொல்ல வேண்டியது அதுதானே? தீர்க்கப்பட வேண்டிய விடயமும் அதுதானே? என்று இந்த முருக பக்தர்கள் கேட்காமல் வெறுமனே பாரத் மாதா கி ஜே என்று அன்னிய மொழியில் கோசம் இட்டு விட்டு கலைந்து போக போகிறார்கள்.  


இந்த அரசியலுக்கு முருகனுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா இந்த அரசியலுக்கும் தமிழனுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? 


என்கிற அடிப்படைக் கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது ஏனெனில் இவர்கள்  தமிழர்களையும் வட இந்தியர்களைப் போல முட்டாள்களாக தலையாட்டிகளாக, மதவெறி கொண்டவர்களாக, மாற்றத் துடிக்கிறார்கள் ஏற்கனவே தமிழகம் சாதி வெறிபிடித்து அலைகிறது கூடவே அதற்கு மத வெறியும் பிடித்தால் வட இந்தியர்களை விடவும் கேடான ஒரு சமூகமாக மாறிவிடுகிற சூழல் இங்கு உருவாகும் அச்சம் #அறிவுசார் மக்களுக்கு எழுவது இயல்பு


#ராமனை சொன்னார்கள் எடுபடவில்லை 

விநாயகனையும் சொல்லிப் பார்த்தார்கள் நினைத்த அளவு எதுவும் நடக்கவில்லை. .. அதனால் இப்போது #முருகனை எடுத்திருக்கிறார்கள் இவர்கள் நோக்கம் பக்தியை வளர்ப்பதல்ல பார்ப்பன பாசிச முதலாளித்துவ பயங்கரவாதத்தை அறியாமையை வளர்த்து தமிழர்களை முட்டாள் ஆக்குவது  அதன் வழியே இவர்கள் ஒரு எளிதாக சுரண்டப்படக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க நினைப்பதுதான் என்பதை தவிர வேறு என்ன? 


முருகன் மாநாடு நடத்தி பெட்ரோல் விலையை குறைக்க போகிறார்களா? தங்கம் விலையை குறைக்க போகிறார்களா? மாநிலத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போகிறார்களா? மாநிலத்தில் தலைவிரித்தாடும் சாதிய ஒடுக்குமுறை கேடுகளை களைந்தெறியப் போகிறார்களா? எதற்காக இந்த மாநாடு இந்த மாநாடு தரப் போகிற பலன் என்ன? ????


முருகன் மாநாடு என்பது அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கா அல்லது இந்த மாநாடுகளை பின்னிருந்து நடத்துகிற நூற்றுக்கும் குறைவான வட இந்திய முதலாளிகளின் கை பாவைகளாக செயல்படும் காவிகளுக்கா என்பதை ஒவ்வொரு இளைஞனும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்📖🪶

Comments