உயர் கல்வி வேட்கையை சீரழிக்கும் சட்டம்

 உயர் கல்வி வேட்கையை சீரழிக்கும் சட்டம்


நீட் என்பது உண்மையில் அப்பட்டமான ஒரு ஜனநாயகமற்ற, மோசமான துரோகத் தன்மை வாய்ந்த அல்லது எளிய மக்களை ஏமாற்றுகிற அதற்கென்றே ரகசியமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பாசிச சட்டம் என்பது வெட்ட வெளிச்சமாகி பல ஆண்டுகளாகிறது. அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டிலேயே அந்த வேதம் கலைந்து விட்டது. எனது வீட்டில் எங்கள் குழந்தைகள் நீட் எழுதி தோல்வியடைந்ததே இல்லை... ஆனால் அவர்களால் மருத்துவப்படிப்பில் சேர முடியவில்லை. கடந்த இரண்டுமுறை எழுதி அரசு கல்லூரியில் கிடைக்காமல் போனதால் மூன்றாவது முறையும் அவர்கள் எழுதினார்கள் அரசு கல்லூரி தான் அவர்களுக்கு கிடைக்கவில்லை தவிர தனியார் மருத்துவ கல்லூரி அவர்களுக்கு நிச்சயம் ஆனால் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் ஒரு சாதாரண அடித்தட்டு மாணவனால் படிக்க முடியுமா... அவ்வளவு பணம் செலவு சய்யாத உனக்கு எதற்கு மருத்துவ படிப்பு என்று கேட்கிறது நீட் என்கிற பசிச சட்டம். அதே நேரம் மிக குறைவான மதிப்பெண் பெற்ற ஒரு பணக்கார மாணவரால் அந்த படிப்பை மிக எளிதாக படிக்க முடியும் நீட் என்பது மிக எழுதவே முடியாத தேறவே முடியாத படிப்பு என்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது... அதில் தேறினாலும் ஒன்றரை கோடி ரூபாய் இல்லாவிட்டால் படிக்க முடியாது என்பதுதான்... நீட் தேர்வாகிவிட்டாலே மருத்துவம் படித்துவிடலாம் என்ற கதை பொய், அதே போல திறமையான மாணவர்களை நிட் தேர்வு சாத்தியமாக்குகிறது என்பது வடிகட்டிய பொய், உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது நீங்கள் மருத்துவ படிப்புக்காக ஒரு கோடி செலவு செய்ய முடியும் என்பதில் தான் நீட் என்பது தீர்மானிக்கிற விஷயமாக உள்ளது உள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை. 





என் வீட்டு குழந்தைகளே 520 மார்க் பிளஸ் டூவில் எடுத்தவர்கள் நீட் இல்லாத காலத்தில் அந்த குழந்தை மிக எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் முடியும் இயல்பிலேயே அந்த குழந்தை இடம் இருக்கிறது ஆனால் நீட் என்ற ஒரு பாசாங்கான பாசிச சட்டம் பணக்காரனுக்கு அல்லது பணக்கார சமூகங்கள் மட்டுமே அந்த படிப்பை படிக்க வேண்டும் என்ற ரகசிய பாசிச பயங்கர சிந்தனைவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டம் அதுவும் சட்ட மருத்துவக் கல்லூரிகள் எதுவும் இல்லை கட்டமைக்கப்படாத ஒரு மாநிலத்துக்கு கூட இந்த நீட் பயன்படலாம் ஆனால் தமிழகம் போன்ற மருத்துவப் படிப்பு கட்டமைப்புகளை வைத்திருக்கும் ஒரு மாநிலம் இந்த சட்டம் என்பது மிகக் கேடுகெட்ட அயோக்கியத்தனமான ஒரு சட்டம் என்பது என்னால் உறுதியாக சொல்ல முடியும், அதனால் என் சொந்தம் குடும்பத்தின் அனுபவங்களே அதை தெளிவாக சொல்கிறது நீட் தேர்வு என்பது கடினமானது என்பதெல்லாம் பாசாங்கு, தேர்வுக்கு முன்பாகவே மாணவர்களை போலியாக அச்சுறுத்தும் தேர்வு மைய நடவடிக்கைகளான அவர்களை பரிசோதிப்பது கம்மல், தாலி, ஆடை அளவுகள், என கெடுபிடிகள் எல்லாம் எதற்கு? இந்த பூச்சாண்டி நாடகங்களுக்கு பின் நீட் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிக்கின்றன மருத்துவ படிப்பு கனவை பயன்படுத்தி சூறையாடுகின்றன என்பதெல்லாம் நாம் புரிந்து கொள்ள முடியாததல்ல! தங்கள் சொந்த அறிவைக் கொண்டே பயிற்சி பெற்று நீட் தேர்வில் எழுதும் குழந்தைகள் ஏராளம் ஆனால் அவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போவதற்கான மார்க்கு மட்டுமே எடுக்கிறார்கள் என்பது சந்தேகத்துக்குரியது திரை மறைவு வேளைகள் உள்ளதா? மார்க்கை திருத்துவது, அதிக மதிப்பெண் அளிப்பது, போன்ற நிறைய குற்றங்கள் நிருபிக்கப்பட்டிருக்கிறது. அதைவிட எல்லா இடங்களிலும் இந்த பாசிச பயங்கர சிந்தனை கொண்ட ஆட்கள் நிரம்பி இருக்கிறார்கள் அவர்கள் இது போன்ற வேலைகளை அதிகாரத்தின் உதவியோடு செய்கிறார்கள் என்கிற சந்தேகம் நமக்குண்டு. 




மருத்துவ கல்வி பயில ஆசைபட்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளை விட அறிவுத்திறன், கல்வித் திறன் குறைவான வசதியான குழந்தைகளுக்கு மருத்துவக் கல்வி சாத்தியமாகிறது என்கிற நேரடி அனுபவத்திலிருந்து நம்மால் உறுதியாக சொல்ல முடியும் இந்த நீட் தேர்வு என்பது மருத்துவப் படிப்புக்குத் தேவையற்ற ஒன்று, குறிப்பாக எளிய மக்களை அதிலிருந்து குறிப்பாக உழைக்கும் மக்களின் உயர் கல்விக்கு எதிரான ஒரு சட்டம் குறிப்பாக இந்த சட்டம் தமிழகத்துக்கு ஒருபோதும் பயனற்றது சமூகநீதி பேசுகிற இந்த குறைந்தபட்ச கல்விக்கான உள்கட்டமைப்புகள், மருத்துவக் கல்லூரிகள் ஓரளவுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளன, ஆர்வமுள்ள, மருத்துவக் கல்விக்கு ஆசைப்படுகிற அதற்கு தகுதியான மதிப்பெண்கள் எடுக்கிற மாணவர்கள் இங்கு ஏராளம் ஆனால் இந்த நீட் என்ற பயங்கர மறைமுக பாசிச சிந்தனை சட்டத்தின் வழியாக பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தான் அவர்கள் கனவு நாசமாக்கப்படுகிறது என்பதை நாம் அனுபவபூர்வமாக உணர்கிறோம். ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வளவு வெளிப்படையாக ஏன் ஏழை எளிய மாணவர்கள் மீது அவர்கள் கல்வி கனவின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது சட்டத்தின் வழியே மாணவர்கள் மீதான மோசமான தாக்குதலாகவே நாம் பார்க்கிறோம். ஏன் இந்த குழந்தைகள் இவ்வளவு ஆசைப்படுகிறார்கள்! ஏன் இந்த குழந்தைகள் மருத்துவ படிப்பின் மீது இவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள்! தோல்வியுற்ற பிறகு ஏன் தற்கொலை செய்துகொண்டு மனநிலைக்கு வந்து விடுகிறார்கள் என்பதெல்லாம் இந்த சமூகத்தின் குறைபாடே தவிர அந்த குழந்தைகளின் குறைபாடு கிடையாது ஆசையோடு படிக்கிற அதற்கான மதிப்பெண் எடுக்கிற மாணவர்களை மேலும் நகர்த்திச் செல்வது தான் ஒரு மக்கள் அரசின் கடமை இருக்க முடியும்... ஆனால் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த படிப்புக்கு அதிகமாக போகிறார்கள். ஆசையும், அறிவும், ஆற்றலும் உள்ள ஏழை எளிய மாணவர்கள் அறிவு இருந்தும் மருத்துவ படிப்புக்கு போக முடியாமைக்கு காரணம் வெளிப்படையாகவே தெரிகிறது. பாசிச பயங்கரங்கள் ஒரு கிருமியை போல எல்லா இடத்திலும் நுழைந்திருக்கிறார்கள், அவர்கள் மாணவர்களின் மதிப்பெண்களில் கை வைக்கிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது கையூட்டு பெற்ற மாணவர்களின் மதிப்பெண்களை உயர்த்துகிறார்கள் இதெல்லாம் வெளிப்படையாகவே நடக்கிறது, நடந்தது குற்றங்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுகிறது குற்றவாளிகள் கையும் களவுமாக கண்டுபிடிக்கப்பட்டது மிகவும் மோசமானது சூழ்நிலையில் இந்த நீட் தேர்வு என்பது எத்தகைய நன்மையை இந்திய மருத்துவ வளர்ச்சிக்கு, மருத்துவ சமூகத்துக்கு, மருத்துவத்தை பயன்படுகிற மக்களுக்கு பயன்படுகிறது போகிறது என்பது ஒரு கேள்வி குறிதான்...

சனநாயக நாடு அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பு வரை அவர்கள் சேர்ந்த மதிப்பெண் எடுத்து கடுமையாக உழைத்து தான் வெற்றி பெறுகிறார்கள் அதாவது பிளஸ் டூ பாடத்திட்டங்கள் குறிப்பாக அவர்கள் உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்து அதில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள் 520 மதிப்பெண் எடுக்கிற ஒரு மாணவி எந்த அளவுக்கு தகுதியானவராக இருப்பார் அவருக்கு மிக இயல்பாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் ஆனால் நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்காத பணக்கார மாணவர்கள் மருத்துவர்கள் ஆகிவிடுகிறார்கள் அவர்களால் இந்த 80% சமூகத்துக்கு என்ன விதமான பயன் கிடைக்கும்? ஏற்கனவே தொழில் ரீதியாக சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சமூகத்தில் வாய்ப்புள்ள பணக்கார மாணவர்கள் சமூகத்தில் உயர்கல்வி பயின்றுள்ளனர் எந்த மாதிரியான ஜனநாயக விளைவுகளை உண்டாக்குவார்கள் என்கிற கேள்வி எல்லாம் பார்வையுள்ள சகோதரத்துவ சிந்தனை உள்ள சமத்துவ அரசியல் புரிதல் உள்ளவர்களுக்கு ஏன் எழக்கூடாது? ஏன் இந்த மக்கள் இன்னும் சட்டங்களை சகித்து கொள்கிறார்கள்? ஏன் மாணவர்கள் சட்டங்களில் பாதிக்கப்பட்டு தங்களை தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள் என்ற கேள்விகள் எல்லாம் நமக்கு ஏற்படுகிறது. அறிவு இங்கு முக்கியமானது பணம்தான் முக்கியம் என்பதை நீட் தேர்வு எங்கள் சொந்த அனுபவத்தில் உணர வைத்திருக்கிறது மதிப்பெண் மட்டும் இங்கு மருத்துவ படிப்புக்கு தேவையென்றால் அறிவு மட்டும் தான் இங்கு என்றால் என் குடும்பத்தில் 75% மாணவர்கள் மருத்துவ மாணவர்களாகவே இருப்பார்கள் அதையும் தாண்டி என் குடும்பத்தில் மருத்துவ மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது வேறு விடயம், ஆனால் பணம் இல்லாத காரணத்தால் அவர்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கிற மிக துயரமான சூழல் எதிர்கொள்ள நேருவதால், குடும்பங்களுக்குள் சிக்கல்கள் ஏற்படுகின்றன எப்படி? இதே விடயம் தான் அனைத்து குடும்பங்களிலும் அனைத்து எளிய மக்களின் வாழ்க்கையிலும் இருக்கும், இது யாருடைய விடயமோ.. இது ஏதோ மாணவர்களுக்கும் அரசுக்குமானதாகும் விடயம் என்றோ நாம் கருதி விடாமல் நீட்டுக்கு எதிரான ஒருமித்த புரிதலையும் அதற்கு எதிரான குரலையும் எழுப்ப வேண்டியது மிக மிக அவசியம்.




Comments