படைப்பாளியும் பதிப்பகமும்


 வேள்பாரி ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி இருப்பது என்பது தமிழ் இலக்கிய சூழலில் மிக மகிழ்ச்சியான உண்மையில் ஒரு அற்புதமான செய்தியும் கூட அதைவிட முக்கிய முக்கியமான செய்தி அந்த பதிப்பகம் அதை ஒரு உலகறிய ஒரு நிகழ்ச்சியை நடத்தி உலகுக்கு அறிவித்தது தான் தமிழ் இலக்கிய பதிப்பக சூழலில் ஒரு முக்கிய வரலாற்று சம்பவமாக எழுத்தாளன் என்கிற முறையில் கருதுகிறேன் ஏனெனில் ஒரு படைப்பாளனின் படைப்பு எவ்வளவு விற்பனையாகிறது என்று இது நாள் வரையிலும் எந்த எழுத்தாளனுக்கும் தெரிந்திருக்கும் என்பதற்கான  எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது ஒரு பதிப்புக்கு எத்தனை புத்தகங்கள் போடுகிறார்கள் என்பதும் தமிழ் எழுத்தாளனுக்கு ஒருபோதும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்கிற சட்டம் இருக்கிறதோ என்னவோ நமக்கு தெரியாது...
ஆனாலும் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன் என் அளவில் நான் எனது பதிப்பகங்களில் எனது படைப்புகளுக்கான ராயல்ட்டியை நான் வாங்கி விடுவேன் என்பது ஒரு ஆறுதலான விடயம் அவர்கள் தருகிற கணக்கை நான் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்பதும் மறுக்க முடியாது சில வேலைகளில் சில கணக்குகள் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கும் சில வேலைகளில் எனக்கு ஆச்சரியம் தரும் விதத்தில் ஒரு சில பத்தாயிரங்கள் கூட அந்த ஆண்டு வந்துவிடும் அதனால் நான் ஓரளவு பரவாயில்லை என்ற மனநிலையில் இருப்பவன் தான் அதனால் நான் பேசுவது என் குறித்து மட்டுமல்ல பொதுவான என் போன்ற என் சக எழுத்தாளர்களின் முணுமுணுப்புகளை நான் கேட்க நேருகிறது அதில் பெருமளவு உண்மையும் இருக்கிறது சில வேலை இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு என்று இல்லாமலே புத்தகங்கள் தொடர்ந்து அச்சிடப்பட்டு விற்பனையாகிக் கொண்டே இருக்கும் எத்தனை 100 புத்தகங்கள் விற்றது எத்தனை ஆயிரம் புத்தகங்கள் விற்றது என்று ஒரு எழுத்தாளனுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்ற சட்டம் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது ஆனால் அது ஒரு சட்டம் போல தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது... இதையெல்லாம் யார் கேட்பது? ஏன் தமிழ்ச் சூழலில் இலக்கியங்கள் அதிக அளவில் மக்களிடம் போய் சேரவில்லை என்பதற்கு பின்னே இப்படியான ஒரு இருட்டு சச்சரவு இருப்பதைய தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவனாக எழுத்தை வாழ்வாக கொண்டு ஏற்கனவே ஏழு நாவல்கள் ஒரு சிறுகதை தொகுப்பு எழுதியவன் என்ற முறையில் கடந்த கடந்த 16 ஆண்டுகளாக ஓயாமல் பதிப்பகத்தோடும் படைப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறவன் என்ற முறையில் என்னால் உறுதியாக சொல்ல முடியும் 



படைப்பாளனுக்கும் பதிப்பகத்துக்கும் இடையில் வெளிப்படை தன்மை வேண்டும் உலகமெங்கும் இருப்பது போல ஒரு இலக்கிய முகவர் மூலம் சட்டபடி அது நடைபெற வேண்டும் தற்போதைய 10 % ராயல்டி சதவிகித கணக்குகள் மாற வேண்டும் ... உலகமெங்கும் அதுதான் நடைமுறை என்கிற போக்கு தமிழ் இலக்கிய சூழலுக்கு பொருந்தாது காரணம் ஒரு சில எழுத்தாளர்களின் படைப்புகளை தவிர பல படைப்புகள் முதல் பதிப்பு விற்று தீர்க்க சில ஆண்டுகள் கூட ஆகும்... தமிழகத்துக்கு வெளியே உலக நாடுகளின் நிலைமைகள் வேறு ஒரு படைப்பு வெளியாகி பல லட்சம் பிரதிகள் விற்கிறது அவர்களுக்கு 10% சரி தமிழ் சூழலில் அது பொருந்துமா?   நிலைமைகள் மாற வேண்டும் ஒரு படைப்பை வாசகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் எந்த பதிப்பகங்களும் ஈடுபடுவதே இல்லை ஒரு படைப்பு தன் சொந்த சக்தியின் வழியே அது நகர்ந்து நகர்ந்து வாசகனிடம் சென்று அதன்  படைப்பின் காத்திரம் மற்றும் அதன் அருமை இவற்றின் ஒளியிலேயே அது நகர்ந்து இளம் வாசகர்களால் சமூக ஊடகங்களால் மட்டுமே இன்றைய சூழலில் அது மற்ற வாசகர்களுக்கோ இல்ல அல்லது பெரும் பரப்புக்கோ கொண்டு செல்லப்படுகிறது. எழுத்தாளனே தனது படைப்பை பலவிதங்களில் உலகுக்கு அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறான் இதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் யாராவது விமர்சிக்கவும் கூடும் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை  

இந்திய சமூக அமைப்பில் எந்த படைப்பை யார் படைப்பை கொண்டாட வேண்டும், எந்த படைப்பை கண்டு கள்ள மவுனமாக நகர வேண்டமென்ற போக்கெல்லாம் இருப்பதை நாம் மறுக்க முடியாது.. அதை வெளிப்படையாக பேசுகிற ஆட்களும் உண்டு இதற்கு மத்தியில்தான் படைப்பு மக்களிடம் போய் சேர வேண்டியுள்ளது. நல்ல வேளையாக இளைஞர்கள் எது மக்கள் படைப்பு, எது இன்றைய தேவை என்பதை புரிந்து நல்ல படைப்புகளை அங்கீகரிக்க தொடங்கியுள்ளனர் என்பது ஆறுதலான விடயம் ஒரு நூல் குறித்து அறிஞனின் வாய் சொல்லுக்காக இளைஞர்கள் இப்போது காத்திருப்பதில்லை படைப்பை அவர்களே புரிந்து மக்களிடம் கொண்டுஉ போகிற சீழல் உருவாகியுள்ளது. ஆனால் பதிப்பகங்கள் பதிக்கிற ஒவ்வொரு புத்தகமும் ஒரு ரூபாய் நோட்டுக்கு சமமானவை அது ஒரு ரூபாயாக இருக்கலாம் 100 ரூபாயாக இருக்கலாம் ஆனால் ஒவ்வொரு புத்தகமும் ஒரு ரூபாய் நோட்டுக்கு சமமானவை அந்த பெருமதிப்பு எழுத்தாளனுக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது ஆனால் அப்படி எந்த பதிப்பகமும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் எனது உறுதியான குற்றச்சாட்டு.... ஒரு சில பதிப்பகங்கள் விதிவிலக்காக இருக்கலாம் (நேர்மையானவர்கள் கவலைபட வேண்டாம்) ஆனால் பதிப்பகங்களிடம் ஒரு நேர்மை இருக்க வேண்டும் என்று ஒரு எழுத்தாளனாக நான் விரும்புகிறேன் ஒருவேளை என்னை போன்றே மற்ற எழுத்தாளர்களும் விரும்பக் கூடும் இதுவரை நான் ஏழு நாவல்கள் வெளியிட்டு இருக்கிறேன், புதிய நாவலொன்றை மிக சமீபத்தில் வெளியிடப் போகிறேன் என்கிற ஓயாது உழைப்பவன் என்பதால் கேட்கும் உரிமை எனக்குண்டு. 

ஒரு படைப்பாளன் வெறுமனே எழுதிக் கொடுப்பவனாகவும் பதிப்பகங்கள் சம்பாதிப்பதற்காக தன் உயிரை மாய்த்துக் கொள்கிறவனாகவும் இந்த சமூகம் நிலைமைகளை கட்டமைத்து வைத்திருக்கிறதா அல்லது எழுத்தாளர் என்பவன் அதற்காக தான் இந்த உலகில் படைக்கப்பட்டிருக்கிறான் என்கிற பொது விதியோ சட்டமோ ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை ஒருவர் புத்தகத்துக்கும் ஒரு பெருமதிப்பு உண்டு அது விற்கிறது விற்காமல் பூச்சரித்து குப்பைக்கு போகிறது என்பது பிரச்சனை அல்ல விற்பனையானா  புத்தகத்துக்குரிய ராயல்டி தொகையை அது ஒரு ரூபாயோ 1000 ரூபாயோ சரியான கணக்குடன் அந்த எழுத்தாளனுக்கு போய் சேருகிறதா என்று கேட்டால் அதில் பல சறுக்கல்கள் இருக்கிறது அப்படி நடப்பதற்கான நியாயத்தையும் நாம் பார்க்கிறோம்... ஏனெனில் புத்தகங்கள் விற்பனையாகாமல் போனால் பதிப்பகங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒரு நிலையும் இருக்கிறது அவர்கள் முதலீடு நட்டமாக போகும் என்பதும் கணக்கில் கொண்டே பேசுகிறோம்... அதே நேரம் 10 புத்தகம் 20 புத்தகம் 100 புத்தகம் விற்கிறது என்றால் அந்த ராயல்டி தொகையை சேமித்து வைத்து தரும் அளவுக்கு பதிப்பகங்களின் வலிமை இருக்கிறதா என்கிற கேள்வியும் அனுசரணையான பார்வையும் நமக்கு உண்டுதான் ஆனால் எழுத்தையே பிழைப்பாக கொண்டு ஓயாமல் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனின் நிலையை பதிப்பகங்கள் எப்படி புரிந்து வைத்திருக்கின்றன அவனுக்கு அவனுக்கு ராயல்டியாக நீங்கள் தருகிற ஆயிரம் ரூபாயோ பத்தாயிரம் ரூபாயோ அல்லது ஒரு ரூபாயோ நீங்கள் தருவது என்பது அவனுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் அதை ஒரு முறையான கணக்கு வைத்து ஒரு ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் தரும் அளவுக்கு கூட பெரும்பாலான பதிப்பகங்கள் இன்னும் வளரவில்லையா என்ற கேள்வியும் நமக்கு எழவே செய்கிறது . ... 






பதிப்பகத்துக்கு 100 புத்தகங்கள் ஆனால் எழுத்தால் எனக்கோ அவன் ஒரு புத்தகம் இந்த நிலைமைகள் நமக்கு புரியாமல் இல்லை ஆனால் எழுத்தின் வழியாக வரக்கூடிய சொற்ப வருமானத்தை ஒரு பெரிய வாழ்வியல் பொருளியல் பங்களிப்பாக கருதும் எழுத்தாளனுக்கு அது எவ்வளவு பெரிய  எதிர்பார்ப்பாக இருக்கும் அந்த எதிர்பார்ப்பை அவனது படைப்பை வெளியிட்ட பதிப்பகம் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை என்று ஒன்று இருக்கிறது அல்லவா இதையெல்லாம் நேர்ப்படுத்தாமல் எப்படி இலக்கியத்தில் நாம் அடுத்த கட்டங்களுக்கு போக முடியும்? இலக்கியம் உயிரோடு இருக்க வேண்டுமானால் மிகச் சிறந்த இலக்கியம் வளர்ச்சி அடைய வேண்டும், மிகச்சிறந்த இலக்கிய வளர்ச்சி அடைய வேண்டுமானால் அந்த இலக்கியத்தை படைக்கிறவன் குறைந்தபட்ச சக்தியோடாவது வாழ்வது  சாத்தியமாக வேண்டும் என்பதும் ஒரு விதி தானே அதை ஏன் இந்த பதிப்பகங்களும், சமூகமும் புரிந்து கொள்ளக்கூடாது உண்மையில் ஒவ்வொரு புத்தகமும் ஒரு எண் இடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு போன்றது என்பது என் கருத்து அதுவே பதிப்பாசிரியரின் கருத்தாகவும் இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். பதிப்பித்த புத்தகம் எத்தனை மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது என்பதி எழுத்தாளனுக்கு தெரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உண்டு என்னை போன்று தான் மற்ற எழுத்தாளர்களும் இருப்பார்கள்

Comments