எழுத்தாளரின் வாழ்க்கை குறிப்பு
கரன் கார்க்கி
பிறப்பு மார்ச் 23 1967, நிகழ்கால தமிழ் படைப்புலக எழுத்தாளர் புதினங்கள், ட்ச்த்வவ் சிறுகதைகள், கட்டுரைகள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள், திரைபடம் இயக்குவதற்கான முயற்சியில் தற்போது இப்படியான படைப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு தனது காணொளிகள் மூலம் சமூகம், இலக்கியம், அரசியல், குறித்த உரையாடல்களை நிகழ்த்துபவர் 2024 இல் புதிய தலைமுறை[1] இவருக்கு இலக்கியத்தில் நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கியது.
வாழ்க்கை குறிப்பு
சென்னை மாவட்டத்தில் வட சென்னையில் புதிய ஜெகநாதபுரம் பகுதியில் பிறந்து வளர்ந்து தற்போது புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் இவரது பெற்றோர் ஜெயராமன் சகுந்தலா இவரது தந்தை வழித் தாத்தா பிரிட்டிஷ் அரசாங்கத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரலாற்று முதுகலை பட்டம் பெற்றவர் தற்சமயம் மனைவி அபிராமி மகள் யாழிசை பாரதி மகன் முகில் மொழியன் இவர்களுடன் சென்னையில் வசித்து வருபவர்

இவர் 1990 களில் கவிதைகள் எழுதத் தொடங்கி கலில் கிப்ரானின் காதல் பறவையின் முறிந்த சிறகுகள் என்கிற கவிதை தொகுப்பை வாசித்தபின் கவிதை எழுதுவதையே கைவிட்டவர் தனக்கு ஏற்ற எழுத்து வடிவம் உரைநடைதான் என்ற முடிவில் சிறுகதைகள் எழுத தொடங்க அதுவும் எதுவும் பிரசுரமாகாத்தால் நாவல்கள் எழுத தொடங்கி எழுதிய இரண்டு நாவல்கள் தான் வாசிக்கும் மொழிபெயர்ப்பு இலக்கியமளவு தரமாக இல்லாததால் எழுதிய அத்தனையையும் கிழித்தெறிந்து தன் முன்னோர்கள் பற்றி எழுத முடிவெடுத்து 2000ல் தனது முதல் நாவலை எழுதி அது சிறப்பாக வந்ததை கண்டு அதை வெளியிட முயன்று அறுபடும் விலங்கு என்ற அந்த புதினத்தை பல போராட்டங்களுக்குப் பிறகு 2009 இல் தான் வெளியிட முடிந்தது... இதுவரையில் எட்டு நாவல்கள் ஒரு சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார்

ஆரம்பத்தில் முதல் மூன்று நாவல்கள் வெளியான போது நவீன தமிழ் இலக்கிய பரப்பில் சென்னையின் முகம் கரன் கார்க்கி என்று பலராலும் சொல்லப்பட்டவர் ஆனால் தனது அடுத்தடுத்த புதினங்களான கருப்பர் நகரம், மரப்பாலம், ஒற்றைப்பல், சட்டைக்காரி,கருந்துளை போன்ற நாவல்கள் அவர் தமிழகம் தாண்டியும் உள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு படைக்கிறவர் என்ற பார்வையை வாசகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியவர், இவரது படைப்புகள் தற்போது ஆங்கிலம், எஸ்தோனியா, கொரியா, துருக்கி, ஒடிசா, போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது
இலக்கியத்தின் முக்கிய வடிவமான புதினங்களை எழுதுவதிலேயே மிக ஆர்வம் கொண்டவராய் இருக்கிறார் இவரது முதல் நாவலான அறுபடும் விலங்கு தமிழ் இலக்கிய பரப்பில் இவருக்கு ஒரு தனித்த இடத்தை உண்டாக்கியது மூன்றாவது நாவலான கருப்பர் நகரம் இவரை மிகப் பரவலாக இலக்கியப் பரப்பில் கொண்டு போய் சேர்த்த படைப்பாகும்
கரன் கார்கி | |
|---|---|
| பிறப்பு | மார்ச் 23 1967 வட சென்னையின் புதிய ஜெகநாதபுரம் |
| தேசியம் | தமிழர் |
| குடியுரிமை | இந்தியர் |
| கல்வி | அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரலாற்று முதுகலை பட்டம் பெற்றவர் |
| பணி | எழுத்தாளர் - நாவல், சிறுகதை, திரைக்கதை-வசனம் |
| உறவினர்கள் | பெற்றோர் ஜெயராமன் சகுந்தலா மனைவி அபிராமி மகள் யாழிசை பாரதி மகன் முகில் மொழியன் |

Comments
Post a Comment